திமுகவுக்குள் நடந்த ரகசிய மீட்டிங்.. உதயநிதி போட்ட ‘ஸ்கெட்ச்’… தவெக அரசை அலறவிட தயாராகும் கனிமொழி படை… அறிவாலயத்தில் இருந்து கசிந்த அந்த ‘டாப் சீக்ரெட்’ பிளான்….!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட எதிர்பாராத தோல்வி மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி ஆகியவை திமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் முதல் உயர்மட்டத் தலைவர்கள் வரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்டிக்காக்கப்பட்ட கூட்டணிகள் சிதறியுள்ள நிலையில், தவெக தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளதை திமுகவினரால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், திமுகவை “காலாவதியான சக்தி” என்றும் “அழுகிப்போன அதிகாரம்” என்றும் கடுமையாகச் சாடியிருந்தார். இதற்கு ஏ.ராசா, ஆர்.எஸ்.பாரதி போன்ற திமுகவின் மூத்த தலைவர்கள் பதிலடி கொடுத்த போதிலும், அவை அக்கட்சியினரைத் தாண்டி பொதுமக்கள் மத்தியிலோ அல்லது சமூக ஊடகங்களிலோ பெரிய அளவில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஆட்சிப் பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், புதிய தவெக அரசுக்கு எதிராக திமுக திட்டமிட்ட குற்றச்சாட்டுகளைப் பரப்புவதாக தவெக ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சமூக வலைத்தளங்களில் நிலவும் இந்த தீவிர எதிர்ப்பிரச்சாரம் திமுகவின் ஐடி விங்குக்கு (IT Wing) பெரும் சவாலாக மாறியுள்ளது. இளைஞர்களைக் கவரும் நோக்கில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடத்தப்பட்ட “ஜென்-இசட் திமுக” (Gen-Z DMK) ஆலோசனைக் கூட்டம், புதுமையான அரசியல் நகர்வாகத் தொடங்கினாலும், இறுதியில் சமூக ஊடகங்களில் கடும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி நெகட்டிவ் ட்ரெண்டாக முடிந்தது. இத்தகைய தொடர் பின்னடைவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தவெக அரசையும் முதலமைச்சர் விஜயையும் கொள்கை மற்றும் அரசியல் ரீதியாக எதிர்கொள்ளும் முக்கியப் பொறுப்பை, திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியிடம் ஒப்படைக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கனிமொழி வெளியிட்டுள்ள ஆக்ரோஷமான அறிக்கைகளும், தவெக அரசின் ‘சிங்கப்பெண் சிறப்புப் படை’ திட்டத்தின் தாமதம் குறித்த அவரின் கேள்விகளும் பெண் வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. கனிமொழியின் முதிர்ச்சியான பேச்சும், வலுவான ஆளுமையும் விஜயின் அரசியல் வேகத்திற்கு முட்டுக்கட்டை போடுவதோடு, விஜயிடம் இருக்கும் பெண் ரசிகர்களையும் தங்கள் பக்கம் இழுக்கச் சரியான தீர்வாக இருக்கும் என்று ஸ்டாலின் நம்புகிறார்.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின், கனிமொழியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். விஜய் தலைமையிலான தவெக அரசின் நிர்வாகத் தவறுகள் மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை உடனுக்குடன் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும் என்றும், தவெக தரப்பிலிருந்து வரும் விமர்சனங்களுக்கு உடனடியாக வலுவான ஆதாரங்களுடன் (Instant Rebuttal) பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அவர் கனிமொழியிடம் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சொற்ப காலமே ஆகியிருந்தாலும், கனிமொழியை முன்னிறுத்தித் தனது இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க திமுக தீவிரமாக முயன்று வருகிறது. ஸ்டாலினின் இந்த புதிய அரசியல் வியூகம் திமுகவுக்கு எந்த அளவுக்குப் பலன் தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Nanthini

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

2 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

2 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

2 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago