தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பல வியூகங்களை வகுத்து வருகிறார்கள். திமுக எப்படியாவது ஆட்சியை பிடிக்க முயற்சித்து வருகிறது. அந்தவகையில் கோவை மாவட்டத்தில் அதிக தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என செந்தில் பாலாஜிக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம்.
அண்ணா அறிவாலயத்தில் ‘உடன்பிறப்பே வா’ என்ற நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இன்று கிணத்துக்கடவு, சூலூர், வால்பாறை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 2026 சட்ட பேரவைத் தேர்தலில் கோவையை திமுகவின் கோட்டையாக மாற்றும் டார்கெட்டை எக்காரணத்தைக் கொண்டும் மிஸ் ஆகக் கூடாது என அறிவுறுத்தியுள்ளாராம்.
