இனி இது இருந்தால் மட்டுமே இருமல் மருந்து வாங்க முடியும்..? வரப்போகும் புது ரூல்ஸ்… மத்திய அரசு எடுத்த முடிவு…!!

By Soundarya on கார்த்திகை 18, 2025

Spread the love

கலப்பட இருமல் மருந்துகளால் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள். இந்நிலையில், இனி மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இருமல் மருந்துகள் வாங்க முடியும் என மத்திய அரசு கட்டுப்பாடு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் ராஜஸ்தானில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்டதால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.