அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் விவகாரத்தில் செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதனை தொடர்ந்து செங்கோட்டையனின் ஆதரவாளர்களையும் அடுத்தடுத்து நீக்கி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சஸ்பென்சாக பதில் ஒன்றை வழங்கியுள்ளார்.
அதாவது செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமரை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு “சஸ்பென்ஸ்… பொறுத்திருந்து பாருங்கள்” என பதிலளித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சிகளை மேற்கொள்ளும் அவர், மறைமுகமாக பல செயல்களை செய்துவருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
