உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனை ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். வயது மூப்பு மற்றும் இதய பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர் கண்காணிப்புடன் கூடிய உயர் சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.
மருத்துவமனைக்கு நேரடியாக சென்ற ஸ்டாலின், அங்குள்ள மருத்துவர்களிடம் துரைமுருகனின் உடல்நிலை குறித்தும், தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்ததுடன், அவர் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
