நடிகை ஸ்ரீவித்யா, தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு நடிகையாக வலம் வந்தவர். ஆரம்பகாலத்தில் கமல், ரஜினி போன்றவர்களுக்கு நாயகியாக நடித்தவர் ஒரு கட்டத்துக்கு பிறகு அம்மா, அக்கா கேரக்டர்களில் நடித்தார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமலுக்கு மனைவியாகவும், அதே படத்தில் தன் பிள்ளைகளான கமலுக்கு அம்மாவாகவும் நடித்திருப்பார். அதே போல தளபதி படத்தில் ரஜினிக்கு அம்மாவாகவும் நடித்தார்.
90 களில் இதுபோல குணச்சித்திர வேடங்களில் கலக்கியவருக்கு 2000க்குப் பிறகு வாய்ப்புகள் படிப்படியாக குறைய ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் தன்னை சினிமா உலகில் இருந்து முழுவதும் தனிமைப் படுத்திக்கொண்ட அவர் தன்னுடைய கடைசி காலத்தில் கமல்ஹாசனை மட்டுமே பார்ப்பேன் என உறுதியாக இருந்தார்.
கமல் வளர்ந்து வரும் காலத்தில் அவருக்கும் ஸ்ரீவித்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் அதை ஸ்ரீவித்யாவின் பெற்றோர் அனுமதிக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. பாரம்பரியமான இசை குடும்பத்தில் பிறந்த ஸ்ரீவித்யாவை அவரது குடும்பத்தினர் பாடகியாக ஆக்கவேண்டும் என நினைத்தனர்.
ஆனால் நடிப்பின் மேலும் நடனத்தின் மேலும் கொண்ட ஆசையால் அவர் நடிப்புத்துறைக்கு வந்தார். நடிப்பு ஆசைப் பற்றி என் அம்மாவிடம் பலரும் சொல்லும்போது அவரும் அரைமனதாய் என்னை சினிமாவில் நடிக்க வைத்தார். நானும் படத்தில் போராடி ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தேன். எல்லாமே சிறுசிறு வேடங்கள்தான் முதலில் அமைந்தன எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் எம் ஜி ஆருடன் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை ஸ்ரீவித்யா முன்பொரு முறை பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் “அப்போது எங்கள் வீட்டருகே நடன நடிகைகள் வீடு இருந்தது. அவர்கள் வீட்டில் போய் விளையாடுவேன். அப்போது அந்த அத்தை உனக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்பார்கள். நான் எம் ஜி ஆர் என்பேன். அவரிடம் பேசுகிறாயா என்பார். என்னப் பேசுவாய் என்று கேட்பார். நான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா என்று கேட்பேன் என்று சொன்னேன்.
உடனே எம்ஜிஆருக்குப் போன் பண்ணி என்னிடம் கொடுத்துவிடுவார்கள். நானும் எம்ஜிஆரிடம் பயம் இல்லாமல் ஐ லவ் யு சொல்வேன்.” எனக் கூறியுள்ளார்.