கொண்டாடும் பாலிவுட்.. மினுமினுக்கும் உடையில் விருது நிகழ்ச்சியில் தன் மனைவியுடன் கலந்து கொண்ட அட்லி.. வைரலாகும் வீடியோ..

By Ranjith Kumar

Published on:

அட்லி அவர்கள் கடந்த ஆண்டு சாருக்னை வைத்த “ஜவான்” என்ற படத்தை இயக்கி அகில இந்திய அளவில் மாபெரும் வெற்றியை தொட்டார், பாலிவுட் சினிமாவில் பெருமளவில் மற்ற மாநில இயக்குனர்கள் எந்த அளவிலும் நுழைந்தது இல்லை, வெற்றி பெற்றதும் இல்லை, ஆனால் முதல் படமே உலக சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் அவர்களை வைத்து படத்தை இயக்கி அதை கோடி கணக்கில் வசூலை அள்ளி டோட்டல் இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தார், தற்போது ஜவான் படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு, விஜய் சேதுபதி, விடிவி கணேஷ் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளார்கள்.

பாலிவுட் சினிமாவில் பெருமளவில் எந்த இயக்குனராலும் நுழைய முடியாது, அப்படி நுழைந்தாலும் அங்கிருக்கும் டெக்னிக்ஷன்ஸ் படக்குழுவினர்களை வைத்து தான் படத்தை இயக்க முடியும், ஆனால் அட்லி அவர்கள் தமிழ் சினிமா துறையில் இருந்து ஒட்டுமொத்த டெக்னீசியன்களையும் படக்குழுவினர்களையும் பாலிவுட்டுக்கு அழைத்து சென்று அங்கே அவர்களை வேலை வாங்கி நல்ல ரிசல்ட் கொண்டு வந்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார். தற்போது ஜவான் படத்திற்கு முன்னதாக பதான் படம் ஷாருக்கானுக்கு வெளியாகிய ஆயிரம் கோடி பெற்றது,

   

அதனால் ஜவான் படத்திற்கும் ஆயிரம் கோடி பெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த நிலையில் 1117 கோடி வசுலை அள்ளி மெகா பாஸ்டர் படமாக மாறி சீனிமா துறையை சம்ப்பித்து போகும் அளவிற்கு ஆளாக்கினார் அட்லீ அவர்கள். இப்படத்திற்காக இன்டர்நேஷனல் அவார்டான “தாதா சகேப் பால்கே” என்ற விருது சமிபத்தில் கூட இவருக்கு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது அட்லி அவர்களுக்கு ரெட் கார்பெட் என்ற பாலிவுட் விழாவில் அழைத்து சிறந்த இயக்குனர் என்று அவார்டு வழங்கி உள்ளார்கள். இதற்காக தன் மனைவி பிரியா அட்லியும் இவரும் இணைந்து அவார்ட் ஃபங்ஷனில் கலந்து கொண்டார்கள்.

பிரியா ரெட் உடையும் அட்லி ப்ளூ உடையிலும் மிகப் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டு கலந்து கொண்டார்கள். இருவரும் மிக அழகான க்யூட்டான ஜோடியாக அந்த நிகழ்ச்சியில் வளம் வந்ததை பார்த்த ரசிகர்கள் மெய்மறந்து தற்போது அந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இதுவரையிலும் எந்த தமிழ் இயக்குனருக்கும் கிடைக்காத வரவேற்பும் பிரம்மாண்டமும் அட்லீ அவர்களுக்கு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட கோலிவுட் வியந்து போகும் அளவிற்கு பாலிவுட் சினிமாவே அட்லீ அவர்களை தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

author avatar
Ranjith Kumar