பாண்டிராஜன் இயக்கத்தில் சசிகுமார் தயாரிப்பில் உருவான படம் தான் பசங்க. இந்த படத்தில் விமல், கிஷோர் என பலரும் நடித்து இருந்தனர். இந்தப் படத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீராம் அந்த படத்திற்கு தேசிய விருது கூட வாங்கினார் . அப்படம் வெளியாகி பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டது . இப்போது நடிகர் ஸ்ரீராம் பூமியை பாதுகாக்கும் வகையில் ஒரு பயோமெட்ரிக் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளாராம்.
கார்பன் வெளியீடு அதிகரித்ததன் காரணமாக புவி வெப்பமயமாவது அதிகரித்து வருகிறது. இதனால் புவியியல் பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. கார்பன் வெளியீட்டை குறைப்பதற்கான Aatrel என்ற பயோமெட்ரிக் நிறுவனம் செயல்படுகிறது. கார்பன் வெளியீட்டை குறைப்பதற்காக பல்வேறு நாடுகளில் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிறுவனம் கார்பன் வெளியிட்டை பூஜ்ஜியம் ஆக்க வேண்டும் என்ற இலக்கில் இயங்கி வருகிறது.
2050 ஆம் ஆண்டுக்குள் இது சாத்தியமாக்கப்படும் என்று பல நிறுவனங்கள் கூறி வருகிறது. சென்னையில் உள்ள தலைமை கார்பன் வெளியிட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக ஸ்ரீராம் பணிபுரிந்து வருகிறார் .
