பெரும் பரபரப்பு..! “அந்த ஒரு நிமிட தாமதம்”… 80 மாணவர்களின் உயிரை காத்தது… ஆசிரியரால் நிகழ்ந்த அதிசயம்..!

By Divyamayakannan on ஆவணி 18, 2025

Spread the love

கடந்த 14ஆம் தேதி ஏற்பட்ட மேக வெடிப்பால் ஜம்மு காஷ்மீரில் சசோட்டி கிராமத்தில் மலைப்பகுதி ஓடையான ரஜாய் நல்லாவில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர் மற்றும் 116 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 70 பேரை காணவில்லை. மீட்பு குழுவினர் மாயமானவரை தேடி வருகிறார்கள்.

அன்றைய தினம் சசோட்டி கிராம ஆரம்பப் பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம் நடந்தது பின்பு சமபந்தி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளி மாணவர்களை முன்கூட்டியே அழைத்துச் செல்ல ஆசிரியர் ஏற்பாடு செய்துக்  கொண்டிருந்தார். ஆனால் சுதந்திர தின விழாவில்  மும்முரமாக இருந்ததால் மாணவர்களை தாமதமாக அனுப்ப நினைத்தார். அன்றைய தினம் காலை 11. 40 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் நிலம் அதிர்ந்து உள்ளது பின்பு மலையின் ஒரு பகுதி சரிந்து ரஜாய் நல்லா ஓடையில் விழுந்ததை ஆசிரியர் பார்த்து உள்ளார். உடனே பள்ளி மாணவர்களை உயரமான இடத்திற்கு ஓடச் சொன்னார்.

   

வெள்ளம் வடிந்த பிறகு தான் மாணவர்களை வெளியே வர அனுமதித்தார். என் மாணவர்கள் சமபந்தி விருந்துக்கு செல்வதாக இருந்தது நான்தான் தாமதப்படுத்தி விட்டேன். அதுவும் நல்லதுக்கே என் மாணவர்களை நான் காப்பாற்றி உள்ளேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

   

நிலச்சரிவில் 13 மாத குழந்தை உயிருடன் மீட்பு. மீட்பு படையின் வீரரான ஷாநவாஸை தான் அந்த 13 மாதம் குழந்தையை உயிருடன் மீட்டு உள்ளார். அவர் மடியில் வைத்தபடி புகைப்படமும் எடுத்துள்ளார் புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. குழந்தையின் பெற்றோரையும் கண்டுபிடித்து விட்டனர். இன்று வரை போனில் அழைத்து அக்குழந்தையைப் பற்றி ஷாநவாஸை விசாரித்து வருகிறாராம்.