Connect with us

CINEMA

ரன், நான் கடவுள் எல்லாம் ஸ்ரீகாந்த் தவறவிட்ட படங்களா..? அவரே பகிர்ந்த ‘மிஸ்டு மூவிஸ்’ லிஸ்ட்..

தமிழில் இயக்குனர் சசி இயக்கிய ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதும் நம்பிக்கைக்குரிய இளம் நடிகராக உருவானார். அடுத்து அவர் நடிப்பில் உருவான ஏப்ரல் மாதத்தில் மற்றும் பார்த்திபன் கனவு ஆகிய திரைப்படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றன.

ஆனால் அதன் பிறகு தேர்வு செய்து நடித்த படங்கள் எல்லாமே அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தருவதில்லை.  அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வெற்றிக்காக காத்திருக்கிறார். இதற்கிடையில் அவர் தெலுங்கில் சில படங்களில் செகண்ட் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

   

எதுவும் வொர்க் அவுட் ஆகாததால் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க ஆரம்பித்தார். இந்நிலையில் இப்போது அவர் நடித்துள்ள சத்தமின்றி முத்தம் தா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படமாவது அவருக்கு திருப்புமுனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்.

இந்நிலையில் இந்த படம் சம்மந்தமாக நடந்த ஒரு நேர்காணலில் தன் சினிமா கேரியரில் நடந்த பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அப்போது தொகுப்பாளர் இந்த சினிமா வாழ்க்கையில் ஏதேனும் தவறான முடிவுகளை எடுத்துவிட்டோம் என வருந்தியதுண்டா? ஏதேனும் படங்களை தவற விட்டுவிட்டோம் என நினைத்தது உண்டா? எனக் கேட்டார்.

அப்போது ஸ்ரீகாந்த் “ரன் படம் நான் நடிக்க வேண்டியதுதான். அது போல ஆயுத எழுத்து மற்றும் டிஷ்யூம் போன்ற படங்கள் நான் நடிக்க இருந்ததுதான். அது போல எம் குமரன் தெலுங்கில் எனக்காக எழுதப்பட்டதுதான். அதே போல நான் கடவுள் படத்தில் இருந்து அஜித் சார் விலகிய பிறகு நான்தான் நடிப்பதாக இருந்தது. இதுபோல ஒரு லிஸ்ட்டே இருக்கிறது.” என வருத்தத்தோடு தெரிவித்துள்ளார். இந்த படங்களில் எதாவது ஒன்றில் அவர் நடித்திருந்தால் கூட இப்போது மார்க்கெட் உள்ள நடிகராக அவர் இருந்திருக்கக் கூடும்.

Continue Reading

More in CINEMA

To Top