Categories: சினிமா

கல்யாணப் பரிசு படத்தில் சிறப்பாக நடித்திருந்தும் இந்தி ரீமேக்கில் அவரை நடிக்க வைக்காத ஸ்ரீதர்… அதற்கு இதுதான் காரணமாம்!

Spread the love

தமிழ் சினிமாவில் கொஞ்சும் தமிழ் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி. கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவரை தமிழ் ரசிகர்கள் கன்னடத்துப் பைங்கிளி என்று சொல்லி அழைத்து கொண்டாடினர். இவர் தமிழில் 1957ஆம் ஆண்டு வெளியான தங்கமலை ரகசியம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

அவர் நடித்த படங்கள் ஹிட்டடித்த நிலையில் முன்னணி நடிகையானார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி, முத்துராமன் என பல முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை சரோஜா தேவி. தமிழில் மட்டுமே 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த ஆதவன் படத்தில் நடித்திருந்தார். வயது முதிர்வு காரணமாக இப்போது அவர் எந்த படத்திலும் நடிப்பதில்லை. சரோஜா தேவி எத்தனையோ தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும் கடைசி வரை அவரின் மழலை தமிழ் மாறவே இல்லை. சரோஜா தேவிக்கு நடிப்பில் பெயர் வாங்கித் தந்த படங்களில் ஒன்று கல்யாணப்பரிசு.

அந்த படத்துக்கு பிறகு அதே படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார் ஸ்ரீதர். அதிலும் சரோஜா தேவியே நடித்தார். அங்கும் படம் சக்கை போடு போட்டது. ஆனால் அடுத்து இந்தியில் படத்தை ரீமேக் செய்த போது அதில் சரோஜா தேவியை நடிக்க வைக்கவில்லை ஸ்ரீதர்.

அதற்குக் காரணம் சரோஜா தேவி தெலுங்கு பட ஷூட்டிங்கின்போது நடந்துகொண்ட விதம் ஸ்ரீதருக்குப் பிடிக்கவில்லையாம். அதை சரோஜா தேவியிடமே நேரிலும் சொல்லிவிட்டாராம். அது சரோஜா தேவிக்கு மிகவும் வருத்தமாக போய்விட்டதாம். அந்த நேரத்தில் பாலும் பழமும் பட வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

அதில் அவருக்கு நோயாளி வேடமாம். அந்த கதாபாத்திரத்தில் தான் சிறப்பாக நடித்ததற்கு கல்யாணப் பரிசு இந்தி ரீமேக் வாய்ப்புக் கிடைக்காத சோகம்தான் காரணம் என சரோஜா தேவி தன்னுடைய சுயசரிதை நூலில் கூறியுள்ளார்.

 

vinoth

Recent Posts

தமிழக அரசியலில் அடுத்த பூகம்பம்… 4 அதிமுக MLA-க்கள் ராஜினாமாவின் பின்னணியில் இருக்கும் ‘ரகசிய’ சதிவலை?…. தராசு ஷ்யாம் உடைத்த அதிரடி உண்மை…!

தமிழக அரசியலில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தொடர் ராஜினாமாக்கள், பல்வேறு சட்டக் கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளன.…

1 minute ago

“தவெக-வின் ரகசிய திட்டம்”… திடீரென ஆளுநரை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி…. தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் பரபரப்பு திருப்பம்….!

தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து, திமுக பிரதிநிதிகள் குழுவினர் முக்கியப் புகார்கள் அடங்கிய மனு ஒன்றை அளித்துள்ளனர்.…

7 minutes ago

இனி இவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாதா? வெளியானது அதிர்ச்சித் தகவல்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சுமார் 6 லட்சம்…

12 minutes ago

BREAKING: செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்…. தவெக ஆட்சிக்கவிழ்ப்பு வழக்கில் அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…

20 minutes ago

BIG NEWS: 2 திமுக MLA-க்களிடம் ராஜினாமா பேரம்…. ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட பகீர் தகவல்…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…

25 minutes ago

கஞ்சா வெறி… கதவைத் திறந்த 60 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை… 23 வயது இளைஞர் செய்த வெறிச்செயல்…!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…

42 minutes ago