Categories: சினிமா

வைரமுத்துவின் முதல் படம் நிழல்கள் இல்லை… எங்கப்பாதான் அவருக்கு சான்ஸ் கொடுத்தாரு- பிரபலத்தின் மகன் பகிர்ந்த தகவல்!

Spread the love

1980 ஆம் ஆண்டு நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடல் வைரமுத்துவை திரையுலகில் அறிமுகப்படுத்தியது. அந்த பாடலின் உருவாக்கத்தின் போதே இளையராஜாவை வெகுவாகக் கவர்ந்தார் வைரமுத்து.

இருவருக்கும் இடையிலான நட்பு அதிகமாகி அடுத்தடுத்த ஆண்டுகளில் இளையராஜா இசையில் அதிக பாடல்கள் எழுதியவராக இருந்தார். ஆனால் இந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது.

அதற்குக் காரணம் இருவருக்கும் இடையிலான படைப்பு ரீதியிலான கருத்து வேறுபாடுதான் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு 35 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வந்தாலும் இணைந்து ஒரே ஒரு பாடல் கூட பணியாற்றவில்லை. பலரும் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்த போதும் அது நடக்கவில்லை.

ஆனாலும் இருவரும் தங்கள் திறமையால் இப்போது வரை தமிழ் சினிமாவில் பிஸியான கலைஞர்களாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் பைரவி மற்றும் சூலம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் எம் பாஸ்கரின் மகனான பிரபு வைரமுத்துவுக்கு முதலில் பாடல் எழுத வாய்ப்புத் தந்தது என்னுடைய தந்தைதான், ஆனால் அதை வைரமுத்து வெளியில் சொல்வதில்லை என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

பைரவி படம் முடிந்தவுடன் சூலம் என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார் எம் பாஸ்கர், அப்போது சங்கர் கணேஷ் இசையில் புதுமுக பாடல் ஆசிரியர் ஒருவரை அறிமுகப்படுத்தலாம் என வைரமுத்துவை பாடல்கள் எழுத வைத்துள்ளார். ஆனால் சூலம் படம் வெளியாகும் முன்னரே நிழல்கள் படம் வெளியாகி ‘இது ஒரு பொன்மாலை பொழுது’ பாடல் ஹிட்டாகிவிடவே சூலம் படம்தான் தன்னுடைய முதல் படம் என்பதை வைரமுத்து யாரிடமும் சொல்லவேயில்லையாம்.

இதனால் கடைசி வரை வைரமுத்து மேல் கோபத்தில் இருந்தாராம் எம் பாஸ்கர். தன்னிடம் இந்த தகவலை தான் இறப்பதற்கு முன்புதான் சொன்னார் என்றும் கூறியுள்ளார் பிரபு.

vinoth

Recent Posts

ஓட்டுநரின் கழுத்தைப் பிடித்த பயணி… 40 உயிர்களைப் பலிவாங்கிய பேருந்து விபத்தின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை…!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…

8 minutes ago

அவன் கூட பேசாத… மற்றொரு கள்ளக்காதலனைத் தீர்த்துக்கட்டிய பெண்… காவிரி ஆற்றில் மிதந்த சாக்குமூட்டை… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி நாடகம்…!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…

21 minutes ago

பெங்களூர் காப்பகத்தில் பயங்கரம்… கழிப்பறையை கண்டாலே அலறும் 2 வயது குழந்தை… வீடியோவில் சிக்கிய கொடூரம்…!

பெங்களூரில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் நடந்த மாபெரும் அத்துமீறல்களும், அங்கிருந்த பெண்களின் கொடூரமான சித்திரவதைகளும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து…

32 minutes ago

தவெக-வில் இருந்து வந்த செம ஆஃபர்…. அதிமுகவில் இருந்து விலகும் Ex அமைச்சர் வளர்மதி?…. சலசலப்பை அடக்கிய அப்சரா ரெட்டியின் ட்வீட்…!

முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்…

38 minutes ago

என்னது,…”அவங்க மூணு பேரும் கூட இருக்கணுமா ?…” யாருமே எதிர்பார்க்காத டிரம்பின் அந்த ‘ஒரே ஒரு’ ஆசை…!

அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் நடத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிரம்ப், பலரும்…

43 minutes ago

திமுக கோட்டை தகர்ந்தது.. மெகா சதி திட்டம்… கோட்டையில் அரங்கேறிய ரகசியம்.. தவெக எம்.எல்.ஏ-க்களிடம் பேசிய அந்த ‘மூளைச்சலவை’ டீம் யார்?… வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்கும் சதித் திட்டம் குறித்த வழக்கு விசாரணையில், தற்பொழுது திடுக்கிடும்…

53 minutes ago