Categories: சினிமா

ஒரே நாளில் ஒரு பாட்டை உருவாக்கி, ஷூட் செய்து படத்தில் இணைத்த ஸ்ரீதர்… காலத்தால் அழியாத இந்த பாட்டுக்கு இப்படி ஒரு backstory இருக்கா?

Spread the love

தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயா சாதித்து சினிமா உலகின் கவனத்தை ஈர்த்தவர்களில் ஒருவர்தான் இயக்குனர் ஸ்ரீதர். 1954ம் ஆண்டு தன்னுடைய 21 ஆவது வயதில், சிவாஜி கணேசன், பத்மினி நடித்த எதிர்பாராதது என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப்படத்தை இயக்கியவர் சித்தரப்பு நாராயணமூர்த்தி. அதன்பின்னர் ஸ்ரீதருக்கு வரிசையாக படங்களில் கதை எழுத வாய்ப்புகள் குவிந்தன. அப்படி ஸ்கிரிப்ட் எழுதிய மற்றொரு ஹிட் திரைப்படம் அமரதீபம். இந்தப்படம் வெளியான ஆண்டு 1956.

இப்படி பல ஹிட் படங்களுக்கு கதை எழுதிய ஸ்ரீதர் கல்யாண பரிசு என்ற படத்தின் மூலம் தானே இயக்குனர் ஆனார். அந்த படமே தமிழ் சினிமாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. முக்கோணக் காதல் கதையை வித்தியாசமான பாணியில் அவர் உருவாக்கியிருந்தார். அதன் பின்னர் நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை , சிவந்த மண் பொன்ற ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்தார்.

ஸ்ரீதர் இயக்கத்தில் 1962ம் வருடம் வெளியான திரைப்படம் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’. இந்த படத்தில் கல்யாண் குமார், முத்துராமன், நாகேஷ், தேவிகா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் ஒரே ஒரு செட்டில் மொத்த படமும் படமாக்கப்பட்டு சூப்பர் ஹிட் ஆனது. வழக்கமாக ஸ்ரீதர் படங்களில் பாடல்கள் ஹிட் ஆவது போல இந்த படத்தின் பாடல்களும் ஹிட்டாகின. இந்த படத்தில் அனைத்துப் பாடல்களையும் கண்ணாதசன் அவ்வளவு அற்புதமான பாடல்களை எழுதியிருப்பார்.

படம் ஷூட்டிங் முடிந்து சென்சாருக்கு செல்ல தயாராக இருந்தது. அதற்கு முதல் நாள் இந்த படத்தில் மற்றொரு துள்ளலான பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என ஸ்ரீதருக்கு யோசனை தோன்றியுள்ளது.  உடனடியாக விஸ்வநாதன் – ராமமூர்த்தி அழைத்து சொல்ல ஒரு மயக்கும் டியூனை உருவாக்கினர். உடனே, கண்ணதாசனை தேடினர். அவர் வந்து 15 நிமிடங்களில் பாடலை எழுதி கொடுத்தார். அதுதான் ‘முத்தான முத்தல்லவோ’ பாடல் ஆகும். பி.சுசிலா பாடி ரிக்கார்டிங் செய்தார்கள்.

இந்த பாடலை உடனெ ஒருநாளில் படமாக்கப்பட்டுள்ளது. நாகேஷை வைத்து சில காட்சிகளையும், முத்துராமன், தேவிகாவை வைத்து சில காட்சிகளையும் படமாக்கி பாடலை எடிட் செய்துள்ளனர். உடனடியாக தயாராக இருந்த படத்தில் அந்த பாடலை சேர்த்து அடுத்த நாளில் சென்சார் செய்யப்பட்டுள்ளது. அப்படி அவசர அவசரமாக எடுக்கப்பட்ட பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடலாக உருவாகியுள்ளது.

 

vinoth

Recent Posts

“ரீல்ஸ் மோகத்தால் சிக்கிய திருடி…!” – திருடிய நகையை போட்டு இன்ஸ்டாவில் ஆட்டம் போட்ட பெண்… ஓராண்டு மர்மம் உடைந்தது… நெட்டிசன்கள் ஷாக்…!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஐ.டி. பார்க் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வீட்டில் இந்த நூதன…

2 minutes ago

காதலனுடன் சேர்ந்து தொழிலதிபரை வீழ்த்திய சியா… கொடூரக் கொலைக்கு 3 வாரங்களுக்கு முன்பே போடப்பட்ட ஸ்கெட்ச்… கொலையாளி சியாவின் லீக் ஆன ஸ்னாப்சாட் சாட்…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட மணமகள் சியா கோயலின் ‘ஸ்னாப்சாட்’ குறுஞ்செய்தி இணையத்தில் வெளியாகி…

5 minutes ago

“ஏய்.. என்னப்பா இது…!” மரண வெள்ளத்தில் மாஸ் காட்டிய காட்டு ஆடு… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!

இயற்கை சீற்றங்களின் போது மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் தங்களின் உயிர் பிழைப்புக்காகப் போராடும் காட்சிகள் நெஞ்சை நெகிழ வைப்பவை. சமீபத்தில்…

15 minutes ago

அனிதா ராதாகிருஷ்ணன் ரவுடியா… அப்போ நீங்க யாரு… தவெகவை கிழித்து தொங்கவிட்ட திமுக பரந்தாமன்…!

அவதூறு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழக அரசால்…

15 minutes ago

அந்தப் பொறுப்பை என்கிட்ட கொடுங்க… விஜயிடம் ரகசிய டீல் பேசிய விஜயபாஸ்கர்… பின்னணியில் இருக்கும் 118 மேஜிக் கணக்கு… அடுத்த ட்விஸ்ட்…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்திருப்பது பார்க்கப்படுகிறது. அவர் மீதான பல்வேறு…

25 minutes ago

“யார் சாமி நீ… தன் மனைவிக்காக.. 20 நாளில் ‘சொந்தமாக’ எஸ்கலேட்டர் செய்த படிக்காத மேதை…! தாஜ்மகாலை மிஞ்சிய ஒரு விவசாயியின் காதல் கதை..!”

வெறும் படிப்பால் மட்டும் வாழ்க்கையில் சாதித்து விட முடியாது என்பதற்கு நம் நாட்டில் வாழ்ந்த, வாழ்கின்ற பல படிக்காத மேதைகளே…

31 minutes ago