#image_title
தமிழ் சினிமாவின் இன்றைய சூப்பர் ஸ்டார் நடிகர்களில் முக்கியமானவர் விஜய். அவரின் சினிமா வாழ்க்கை இப்போது உச்சத்தில் இருக்கிறது. அவரின் சுமாரான படமான லியோ படம் கூட 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது.
விஜய்யின் இந்த அசுர மார்க்கெட் வளர்ச்சி சமிபகாலத்தில் எக்குதப்பாக வளர்ந்து வந்தது. இதற்கு அவர் அட்லி, முருகதாஸ் மற்றும் லோகேஷ் போன்ற புதிய தலைமுறை இயக்குனர்களோடு கைகோர்த்ததுதான். அதனால்தான் எட்ட முடியாத உயரத்தில் இருந்த ரஜினியை கூட எட்டிப் பிடித்தார்.
இப்போது அரசியலுக்கு வந்துவிட்ட அவர் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பேன் எனக் கூறிவிட்டார். இதனால் அவரின் கோட் படத்தின் மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.
இந்நிலையில் மறைந்த நடிகர் மனோபாலா விஜய் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். ஒரு நேர்காணலில் பேசிய அவர் “நான் ஒருமுறை விஜய்யிடம் ‘ஏன் தம்பி இந்த சுறா படத்துல எல்லாம் நடிச்ச?” என்க கேட்டேன். அவர் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு “அதை ஏன் கேக்குறீங்க அண்ணன். அந்த டைரக்டரை வந்து ‘ஏன் டா அவன கொன்னு தரையில போடாம, தண்ணில போட்டுட்டு வந்த, அவன் சுறாவ எழுந்து வருவாண்டா” என பில்டப்போடு சொன்னாரு. அத நம்பி ஏமாந்துட்டேன் அண்ண’ என்றார்.
நான் ‘அதெல்லாம் டயலாக் தம்பி. அத நம்பி படம் நடிக்கலாமா? இனிமேலாவது புது டீம் கூட சேர்ந்து படம் பண்ணு” என சொன்னேன்” என தெரிவித்துள்ளார். சுறா விஜய்யின் 50 ஆவது படமாக வந்து மிகமோசமான தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது தலைக்கவசத்தில் சிறிய கேமராவைப் பொருத்திப் பயணிக்கும் வீடியோ இணையத்தில்…
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி, 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் தில்லி ஜந்தர்…
சாலையில் அலைந்து திரிந்த எருது ஒன்று திடீரென குறுக்கே பாய்ந்ததில், அவ்வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகன ஓட்டி தூக்கி…
பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் லண்டன் ஐ பின்னணியில் நின்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில்…
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான 'பேங்க் ஆஃப் பரோடா' 'வெல்த் எக்ஸிகியூட்டிவ்' மற்றும் 'கிரெடிட் அனலிஸ்ட்' ஆகிய பதவிகளுக்கு…
பிரான்சில் பேருந்து பழுதாகி வழியில் சிக்கித் தவித்த இந்திய பெண் மருத்துவர் ஒருவர், "இந்தியர்களின் செயல்பாட்டு முறை முற்றிலும் வேறுபட்டது"…