Categories: சினிமா

“ஆண்பாவம் பொல்லாதது… என்னை ஏமாற்றிவிட்டு செல்லும் நீ அவஸ்தைப் படுவாய்”… ஸ்ரீவித்யாவுக்கு சாபம் கொடுத்த மூத்த நடிகர்!

Spread the love

நடிகை ஸ்ரீவித்யா 70 களில் பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். ஜெய் சங்கர், சிவாஜி கணேசன், சிவகுமார் கமல், ரஜினி போன்றவர்களுக்கு நாயகியாக நடித்து திறமையான நடிப்பை வெளிப்படுத்தியவர். தமிழைப் போலவே மலையாள சினிமாவிலும் பல படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் மலையாள சினிமாவிலேயே செட்டில் ஆனார்.

ஒரு கட்டத்துக்கு பிறகு தமிழில் அம்மா, அக்கா கேரக்டர்களில் நடித்தார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமலுக்கு அம்மாவாகவும் தளபதி படத்தில் ரஜினிக்கு அம்மாவாகவும் நடித்தார். யாரோடு எல்லாம் ஜோடியாக நடித்தாரோ அவர்களுக்கே அம்மாவாக நடிக்கும் முரண் அவரது வாழ்க்கையில் நடந்தது.

ஸ்ரீவித்யா வாழ்க்கை பல சோகங்களாலும் முரண்களாலும் அமைந்தது. அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போது தன்னை விட வயதில் இளையவரான கமல்ஹாசனை காதலித்ததாகவும், ஆனால் அவர்களின் காதலை ஸ்ரீவித்யாவின் பெற்றோர் பிரித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன் காரணமாகதான் அவர் தமிழ் சினிமாவை விட்டே சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. அவர்களின் இந்த காதலைதான் கமல் தன்னுடைய உத்தம வில்லன் படத்தில் காட்சி படுத்தி இருப்பதாக சொல்பவர்களும் உண்டு.

இந்நிலையில் கமல்ஹாசனுக்கு முன்பாகவே தன்னோடு பல படங்களில் இணைந்து நடித்த ஒரு மூத்த நடிகரை ஸ்ரீவித்யா காதலித்தாராம். வெளியே அதிகம் தெரியாத இந்த காதல் வளர்ந்தால் உன்னுடைய சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும் என ஸ்ரீவித்யாவுக்கு நெருக்கமான இயக்குனர் ஒருவர் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

ஸ்ரீவித்யாவும் அதை ஏற்றுக்கொண்டு அந்த நடிகருடனான காதலை மனதுக்குள் புதைத்துக்கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த நடிகர் “இன்று நீ என்னை ஏமாற்றிவிட்டு செல்கிறாய். ஆண்பாவம் பொல்லாதது. ஒரு நாள் நீ ஆண் வர்க்கத்தால் அவஸ்தைப்படுவாய்” என சாபம் விட்டுள்ளார். தன்னுடைய வாழ்க்கையின் கடைசி நாட்களில் அந்த நடிகரின் சாபம்தான் தன்னை இப்படி அவஸ்தைப் படுத்துகிறது என வருந்தினாராம் ஸ்ரீவித்யா.

vinoth

Recent Posts

“சின்ன தம்பி உன்னை நம்பி…” விஜய்க்காக இளையராஜா போட்ட ஸ்கெட்ச்?…. 2026 தேர்தல் முடிவுகளுக்கு முன்பே கசிந்த ரகசியம்..!

2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அரசியல் களம் மிகுந்த எதிர்பார்ப்புடன்…

48 seconds ago

“இதெல்லாம் ஒரு வதந்தியா?”… மணமகனுக்கு இது 3வது கல்யாணமா?… தாலி கட்டும் நேரத்தில் நின்ற திருமணம்! உ.பி-யில் பரபரப்பு…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், ஒரு சிறிய வதந்தியால் கோலாகலமாக நடக்கவிருந்த திருமணம் பாதியிலேயே நின்ற சம்பவம் பெரும்…

4 minutes ago

“இந்தியாவில் ‘ஜாம்பி’ ஊடுருவல்?… இளைஞர்களை நடைப்பிணமாக்கும் அந்த கொடூர போதை… நெஞ்சை பதறவைக்கும் காட்சி”…!!!

இந்தியாவில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது நாட்டின் எதிர்காலத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தலாகும். குறிப்பாக, 'ஜாம்பி டிரக்' போன்ற…

15 minutes ago

“வெளியே உன் கார் நிக்குதுடா” பொய் சொன்ன காதலனை நடுரோட்டில் வைத்து… ஹோட்டல் ரூமில் காதலன் செய்த ‘அந்த’ காரியம்…!!

நள்ளிரவு 12 மணி இருக்கும், தன் காதலனிடம் ஏற்பட்ட மனக்கசப்பிற்காக மன்னிப்பு கேட்க எண்ணிய ஒரு இளம் பெண், நேராக…

19 minutes ago

நிஜமாகவே அவர் ஆம்பளதானா..? “ஒரு வருஷமா என்ன தொடக்கூட இல்ல” ரகசிய கேமரா வைத்த மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில், பல லட்சம் ரூபாய் செலவு செய்து கோலாகலமாக நடந்த ஒரு திருமணம், தற்போது…

25 minutes ago

இரட்டை குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் பறிபோன உயிர்… தவறான ஊசியால் துடிதுடித்த தாய்.. தனியார் மருத்துவமனையின் பகீர் அலட்சியம்..!!

டெல்லி படேல் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த சில மணி நேரங்களிலேயே 35 வயதான ஷிவாங்கி…

32 minutes ago