#image_title
நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார் மேலும் பிரசாந்த், பிரபு, உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது கேரளாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த விஜயை சந்திப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். உடனே நடிகர் விஜய் பேருந்து மீது ஏறி நின்று தன்னை சுற்றி இருந்த கேரளா ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசினார். அவர் பேசியதாவது, சேச்சி, சேட்டன்மார்.. ஓணம் பண்டிகையில் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பீர்களோ, அந்த அளவுக்கு உங்களின் முகத்தை பார்க்கும் போது எனக்கு சந்தோஷமாக உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள நண்பா நண்பி மாதிரி நீங்களும் வேற லெவல் என மலையாளத்தில் பேசி அசத்தினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே தனது 69-ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க போவதாக அறிவித்தார்.
ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது அரசியல் கட்சியையும் தொடங்கிவிட்டார். படத்தின் ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு ஏராளமான ரசிகர்கள் திரண்ட நிலையில் இனிவரும் நாட்களில் அரசியலுக்கு வந்து பிரச்சாரத்தை ஆரம்பித்தால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதை ஆற்றின் பர்கி அணைப் பகுதியில் நிகழ்ந்த கோரப் படகு விபத்து, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.…
ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளர் ஒருவர் தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிகவின் கோட்டைகளாகக் கருதப்படும் விருத்தாச்சலம் மற்றும் விருதுநகர் தொகுதிகளில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த அரசியல் களமும் காத்திருக்கிறது.…
திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், உணவக நிறுத்தத்தில் ஏற்பட்ட தகராறில் பயணியை ஓட்டுநரும் நடத்துநரும் தாக்கிய…