#image_title
நடிகர் அஜித்குமார் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் விடமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் அர்பைஜானில் நடைபெற்றது. ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே சென்னைக்கு வந்த அஜித் தனது மகனின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காதிற்கு கீழே சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஏற்கனவே துணிவு பட ஷூட்டிங் பிரேக் கிடைத்த போது அஜித் பைக்கில் சுற்றுப்பயணம் சென்றார்.
தற்போது விடாமுயற்சி பட ஷூட்டிங்கில் ஓய்வு கிடைத்திருப்பதால் நலமுடன் வீடு திரும்பிய உடனே மீண்டும் பைக்கில் சுற்றுப்பயணத்திற்கு சென்று விட்டார். இது தொடர்பான புகைப்படங்களை மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அஜித் மத்திய பிரதேச மாநிலத்தில் தனது பயணத்தை தொடங்கினார்.
அவர் சக ரைடருக்கு பைக் ஓட்டுவது எப்படி என்று சொல்லிக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அஜித் சக ரைடர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்து ரசிகர்கள் இந்த வயதிலும் அஜித் எனர்ஜி வேற லெவலில் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
வந்தே பாரத் ரயிலின் கழிவறையில் பாம்பு இருப்பதாகப் பயணி ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படத்தைக்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வந்த மருமகனுக்கு, மாமனாரே விஷம் வைத்துக் கொலை செய்துள்ள…
2026 ஐ.பி.எல். சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கே.எல். ராகுல், ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள்…
பெட்ரோல் பங்குகளில் நடக்கும் மோசடிகளை ஒரு இளம்பெண் தனது சமயோசித புத்தியால் அம்பலப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப்…
சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு, பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலராலேயே…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஈரானிய கடற்படையை…