“ஆண்பாவம் பொல்லாதது… என்னை ஏமாற்றிவிட்டு செல்லும் நீ அவஸ்தைப் படுவாய்”… ஸ்ரீவித்யாவுக்கு சாபம் கொடுத்த மூத்த நடிகர்!

By vinoth

Updated on:

நடிகை ஸ்ரீவித்யா 70 களில் பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். ஜெய் சங்கர், சிவாஜி கணேசன், சிவகுமார் கமல், ரஜினி போன்றவர்களுக்கு நாயகியாக நடித்து திறமையான நடிப்பை வெளிப்படுத்தியவர். தமிழைப் போலவே மலையாள சினிமாவிலும் பல படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் மலையாள சினிமாவிலேயே செட்டில் ஆனார்.

ஒரு கட்டத்துக்கு பிறகு தமிழில் அம்மா, அக்கா கேரக்டர்களில் நடித்தார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமலுக்கு அம்மாவாகவும் தளபதி படத்தில் ரஜினிக்கு அம்மாவாகவும் நடித்தார். யாரோடு எல்லாம் ஜோடியாக நடித்தாரோ அவர்களுக்கே அம்மாவாக நடிக்கும் முரண் அவரது வாழ்க்கையில் நடந்தது.

   

ஸ்ரீவித்யா வாழ்க்கை பல சோகங்களாலும் முரண்களாலும் அமைந்தது. அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போது தன்னை விட வயதில் இளையவரான கமல்ஹாசனை காதலித்ததாகவும், ஆனால் அவர்களின் காதலை ஸ்ரீவித்யாவின் பெற்றோர் பிரித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன் காரணமாகதான் அவர் தமிழ் சினிமாவை விட்டே சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. அவர்களின் இந்த காதலைதான் கமல் தன்னுடைய உத்தம வில்லன் படத்தில் காட்சி படுத்தி இருப்பதாக சொல்பவர்களும் உண்டு.

இந்நிலையில் கமல்ஹாசனுக்கு முன்பாகவே தன்னோடு பல படங்களில் இணைந்து நடித்த ஒரு மூத்த நடிகரை ஸ்ரீவித்யா காதலித்தாராம். வெளியே அதிகம் தெரியாத இந்த காதல் வளர்ந்தால் உன்னுடைய சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும் என ஸ்ரீவித்யாவுக்கு நெருக்கமான இயக்குனர் ஒருவர் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

ஸ்ரீவித்யாவும் அதை ஏற்றுக்கொண்டு அந்த நடிகருடனான காதலை மனதுக்குள் புதைத்துக்கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த நடிகர் “இன்று நீ என்னை ஏமாற்றிவிட்டு செல்கிறாய். ஆண்பாவம் பொல்லாதது. ஒரு நாள் நீ ஆண் வர்க்கத்தால் அவஸ்தைப்படுவாய்” என சாபம் விட்டுள்ளார். தன்னுடைய வாழ்க்கையின் கடைசி நாட்களில் அந்த நடிகரின் சாபம்தான் தன்னை இப்படி அவஸ்தைப் படுத்துகிறது என வருந்தினாராம் ஸ்ரீவித்யா.