அதிவேகமாக வந்த ஸ்போர்ட்ஸ் பைக்.. நொடி பொழுதில் நடந்த விபத்து.. பதை பதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ..!

By Nanthini on ஆடி 9, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் மைசூரில் நடந்த சாலை விபத்து குறித்த ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் வேகமாக வந்த ஸ்போர்ட்ஸ் பைக் மோதியதில் உணவு டெலிவரி முகவரும், பைக்கில் சென்ற ஒரு இளைஞரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. Zomato டெலிவரி ஊழியராக பணியாற்றும் கார்த்திக் சாலையோரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் சையத் என்ற இளைஞர் சுசுகி ஹயாபூசா ஸ்போர்ட்ஸ் பைக்கில் அதிவேகமாக வந்து கார்த்தியின் வாகனம் மீது மோதியுள்ளார். விபத்தில் பலத்த காயமடைந்த கார்த்திக்கு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோதிய பிறகு அந்த பைக் சாலையில் சிறிது தூரம் சென்று மின்கம்பத்தில் மோதியது. இதனால் பைக்கில் இருந்த பெட்ரோல் கசிந்து தீப்பிடித்த நிலையில் படுகாயம் அடைந்த சையத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சையின் போது அவர் உயிரிழந்து விட்டார். தற்போது அந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.