“இந்தியர்களை நாடு கடத்துங்கள்” ஏன் இங்கே வேலை செய்கிறார்கள்..? கடுமையாக சாடிய இங்கிலாந்து பெண்மணி..!!

By Soundarya on ஆடி 9, 2025

Spread the love

லண்டனில் உள்ள ஹூத்ரே விமான நிலையம் மிகவும் பிரபலமானது. இங்கு சமீபத்தில் இங்கிலாந்து பெண்மணி லூசி ஒயிட் என்பவர் வந்து இறங்கிய போது அங்கு வேலை செய்யும் இந்திய பணியாளர்களை சரமாரியாக சாடியிருக்கிறார் . இது குறித்து லூசி ஒயிட் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, ” விமான நிலையத்தில் பெரும்பாலான ஊழியர்கள் இந்தியர்கள் அல்லது ஆசியா வம்சா வழியை சேர்ந்தவர்கள் என்பதை நான் கவனிக்கிறேன்.

அவர்களை ஆங்கிலத்தில் பேச சொன்னேன். அவர்களை தன்னை ஒரு இனவெறி பிடித்தவர் என்று குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் ஏன் இங்கிலாந்திற்குள் நுழையும் முதல் இடத்தில் வேலை செய்கிறார்கள்? அவர்கள் அனைவரையும் நாடு நடத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இந்த இங்கிலாந்து பெண்மணியின் இந்த பதிவை  கண்டித்து பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.