ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த சீனிவாஸ் குடும்பத்தினருடன் ஹைதராபாத் புறநகர் பகுதியான ராமச்சந்திராபுரத்தில் வசித்து வருகின்றார். இவருக்கு 23 வயதில் ரம்யா என்ற மகள் உள்ள நிலையில் அவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். வேல் துருத்தி மண்ணேப் பள்ளியை சேர்ந்த பிரவீன்குமார் என்ற வாலிபர் பட்டப்படிப்பு முடித்த நிலையில் அப்பகுதி மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வந்துள்ளார். அப்போது ரம்யா உடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு ரம்யாவின் வீட்டிற்கு சென்ற பிரவீன் குமார் தங்களின் காதல் விவகாரம் குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். அதற்கு ரம்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து மாப்பிள்ளை தேடி வந்த நிலையில் நேற்று ரம்யா பெற்றோர் இல்லை என்பதை அறிந்த பிரவீன்குமார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று வற்புறுத்தினார். அதற்கு ரம்யா படிப்பு முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
திருமணம் சம்பந்தமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பிரவீன்குமார் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து ரம்யாவின் கழுத்தை அறுத்து தலையைத் துடித்தார். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். பிறகு பிரவீன் குமார் அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்து கொண்டார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 3 வருடம் காதல் இனித்தது கல்யாணம் என்று வரும்போது கசக்குதா என்ற காதலன் செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
