ஐயோ பாவம்… மரண பிடியில் சிக்கிய வாடிக்கையாளர்… நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை நசுக்கி… ஷோரூம் கடைக்குள் புகுந்த அதிவேக கார்… பொருட்கள் வாங்க வந்தவர் பரிதாப பலி – 3 பேர் படுகாயம்…!

By Swetha on ஆவணி 1, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் உள்ள தவ்ரு பகுதியில் ஒரு அதிவேகக் கார் பல வாகனங்கள் மீது மோதி, கடைசியாக ஒரு டைல்ஸ் ஷோரூமுக்குள் புகுந்து கோர விபத்துக்குள்ளானது. தனது கட்டப்பட்டு வரும் வீட்டிற்காக டைல்ஸ் வாங்க ஷோரூமிற்கு வந்திருந்த 34 வயதான கபில் என்பவர் இந்த கொடூர சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஷோரூமிற்குள் கார் மோதி விபத்துக்குள்ளாவதற்கு முன்பாக, அது கட்டுப்பாட்டை இழந்து பாதையில் நின்று கொண்டிருந்த ஒரு பிக்கப் வாகனம், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பாதசாரி மீதும் பலமாக மோதியது.

   

https://twitter.com/Deadlykalesh/status/2083175488768655614/video/1

   

இந்த தொடர் விபத்தின் காரணமாக சம்பவ இடத்தில் இருந்த மேலும் மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.