ஓணம் பண்டிகையையொட்டி பலரும் சொந்த ஊரான கேரளாவிற்கு செல்வார்கள். இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி ஆக.28-ம் தேதி சென்னை சென்ட்ரல் கண்ணூருக்கும் (TRAIN NO: 06009), ஆக.30-ம் தேதி பெங்களூரு – கண்ணூருக்கும் (TRAIN NO: 06125) ஸ்பெஷல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஊருக்கு செல்பவர்கள் இன்று காலை மறக்காம சென்று டிக்கெட் முன்பதிவு செஞ்சிக்கோங்க.
