மெட்டா நிறுவனம், மார்க் ஜுக்கர்பெர்க் பதுங்கு மாளிகை ஒன்றுக்கட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 300 மில்லியன் டாலர் செலவில் கட்டி வருகிறாராம். சமீபகாலமாகவே கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோ பகுதியில் 110 மில்லியன் டாலர் செலவில் 11 வீதிகளை வாங்கி உள்ளாராம். கடந்த 2016 ஆம் ஆண்டு இதில் நாலு வீடுகளை இடித்து நிலத்தடியில் மாளிகை ஒன்றை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மாளிகையில் தோட்டங்கள், நீச்சல் குளம், ஆடம்பர வசதிகள் உடன் விருந்தினர் மாளிகையை அமைத்து உள்ளாராம். இரண்டு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹவாய்ன் தீவில் நிலம் வாங்கி இரண்டு பெரிய ஆடம்பர மாளிகையை நிலத்தடியில் கட்டி வருகிறாராம்.
சாம் ஆல்ட்மேன் இவர் Open AI CEO. நிலத்தடியில் தலைமை அகத்தை வைத்துள்ளாராம், இதைக் குறித்து அவர் வெளிப்படையாக பேசி உள்ளார், எனவே பதுங்கு குழி என குறிப்பிடவில்லை. உலகில் சமீபத்தில் வந்த போர்களை சுட்டிக்காட்டி இன்னொன்று கூட கட்டலாம் என்று சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். அமேசான் நிறுவனம் ஜெப் பெசோஸ்கம், ரகசிய ஆடம்பர மாளிகை ஒன்றுக் கட்டிவருகிறார்.
உலகளவில் முதல் பணக்காரரான எலான் மாஸ்க் நாலு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 356 மில்லியன் டாலருக்கு பெரிய எஸ்டேட் ஒன்று டெக்ஸாஸின் ஆஸ்டினுக்கு வெளியே கட்டிவுள்ளார் . அதில் மூன்று மனைவிகள் மற்றும் 12 குழந்தைகள் வசித்து வருகிறார்களாம். மற்றும் எலான் மாஸ்க் உலக அழிவு ஏற்படும் சூழலில், அவரது குடும்பத்தை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளதாக கூறியுள்ளார். பதுங்கு குழிகளில் சூரிய ஒளி வரும் படி அமைத்துள்ளனர், மண்ணில்லாமல் காய்கறி மற்றும் தானியங்களை வளர்க்க ஹைட்ரோபோனிக் பண்பையும் அமைத்துள்ளனர்.
