ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஸ்பெஷல் அறிவிப்பு… வரும் சனிக்கிழமை மிஸ் பண்ணிடாதீங்க…!!

By Soundarya on மார்கழி 11, 2025

Spread the love
பொது விநியோகத் திட்டத்தின் (PDS) மாதாந்திர மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை (13.12.2025) அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.  இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் அல்லது நீக்கம் செய்தல். முகவரி மாற்றம் செய்தல். கைபேசி எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல். நியாயவிலைக் கடைகள் தொடர்பான புகார்களைத் தெரிவித்தல். நியாயவிலைக் கடைகளில் நேரில் சென்று பொருள் பெற இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்குதல் ஆகிய சேவைகள் ஒரே நாளில் வழங்கும் விதமாக மேற்கொள்ளப்படுகிறது.
 இந்த முகாம் பற்றிய கூடுதல் விவரங்களை உங்கள் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பார்க்கலாம் அல்லது தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.