அதிர்ச்சி..! கார் விபத்தில் பிரபல நடிகை மரணம்… திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்…!!

By Soundarya on மார்கழி 11, 2025

Spread the love
அமெரிக்க நடிகை வென்னே ஆல்டன் டேவிஸ் (60), கார் விபத்தில் உயிரிழந்தார்.   “தி மார்வெலஸ் மிஸ்ஸஸ் மைசெல்” போன்ற பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் இவர் நடித்திருந்தார்.  நியூயார்க்கில்  கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி சாலையைக் கடக்க முயன்றபோது, அவர் மீது ஒரு கார் மோதியது. 
இதில் படுகாயமடைந்த வென்னே ஆல்டன் டேவிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.