BREAKING: அதிமுகவில் டிச.15 முதல் விருப்ப மனு…. EPS அதிரடி அறிவிப்பு..!!

By Soundarya on மார்கழி 11, 2025

Spread the love
 2026 தேர்தலில் போட்டியிட டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23 வரை விருப்ப மனுக்களைப் பெறலாம் என்று அறிவித்திருக்கிறார்.  டிசம்பர் 15  முதல் நாள்  நண்பகல் 12:00 மணிக்கு (நல்ல நேரம்) தொடங்குகிறது. டிசம்பர் 16 முதல் 23 வரை  காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம்.
 

விருப்ப மனுவில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.