Categories: சினிமா

முதல் இந்தி பாட்டு… பதற்றத்துல லதா மங்கேஷ்கர் மேல் காஃபியைக் கொட்டிய SPB.. பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Spread the love

இந்திய சினிமாவில் அதிக பாடல்களை பாடிய ஆண் பாடகர் என்ற பெருமைக்குரியவர் எஸ் பி பாலசுப்ரமணியன்.  இவர் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ் பி பி சென்னையில் படிக்கும்போது பாடல்கள் பாடுவதில் ஆர்வம கொண்டு அதற்கான வாய்ப்புகளை தேடி வந்தார். அவருக்கு முதலில் பாட வாய்ப்புக் கிடைத்தது தெலுங்கு சினிமாவில்தான்.

1966-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான எஸ்.பி.பி 1969-ம் ஆண்டு தமிழில் ஹோட்டல் ரம்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இந்த படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழில், சாந்தி நிலையம் என்ற படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி என்ற பாடல் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார்.

எம் ஜி ஆருக்காக ஆயிரம் நிலவே வா பாடலை பாடிய பின்னர் கவனிக்கப்படும் பாடகர் ஆனார். ஆனால் அவர் உச்சத்துக்கு சென்றது இளையராஜாவின் வருகைக்குப் பிறகுதான். இளையராஜா இசையில் அதிக பாடல்களை பாடிய பாடகர் என்றால் அது எஸ் பி பிதான். சில ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். அது இன்னமும் தமிழ் சினிமா ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மரணமாக இருக்கிறது.

80 களில் தமிழ் சினிமாவில் நட்சத்திரப் பாடகராக உருவாகி வந்த அவரைத் தன்னுடைய ஏக் தெ துஜே கேலியே படத்தின் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்தினார். அந்த படத்தில் லஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் லதா மங்கேஷ்கரோடு இணைந்து பாடலை பாடியுள்ளார் எஸ் பி பி. அப்போது அவருக்கு இந்தி வரிகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என லதா மங்கேஷ்கர் சொல்லிக் கொடுத்தாராம்.

ஆனாலும் அவ்வளவு பெரிய பாடகி முன்னால் பாடப் போகிறோம் என்ற பதற்றத்திலேயே இருந்துள்ளார் எஸ் பி பி. அதன் காரணமாக காஃபியை அவர் சேலை மேல் கொட்டிவிட்டாராம். ஆனால் அதை லதா ஜி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். இதை ஏக்  து ஜே கேலியே படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய சுரேஷ் கிருஷ்ணா பகிர்ந்துள்ளார்.

vinoth

Recent Posts

கள்ளக்காதல் சந்தேகத்தால் பயங்கரம்…! மனைவி, ஆண் நண்பர் மீது துப்பாக்கி சூடு… கணவரின் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில், ரிஷப் என்ற நபர் தனது உரிமம் பெற்ற ரிவால்வர் துப்பாக்கியைப் பயன்படுத்தி தனது மனைவி…

4 minutes ago

தமிழ்நாட்டில் 21,655 பேருக்கு டெங்கு… 10 பேர் பலி… வீடுகளுக்கே வந்து ஆய்வு செய்யும் அமைச்சர்…. மக்களுக்கு அரசு எச்சரிக்கை…..!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், சென்னை மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் குறித்து மருத்துவம்…

5 minutes ago

“இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?”…. ஸ்மார்ட் மீட்டர் டெண்டரால் அதிர்ச்சியில் தமிழக மக்கள்…. வெளியான ஷாக் நியூஸ்….!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் முடிவைக் கண்டிக்கும்…

14 minutes ago

கடவுளே…! சைக்கிளில் சென்ற 12 வயது சிறுமி… மோதிவிட்டு நிற்காமல் சென்ற பள்ளி பேருந்து…. இணையத்தில் வைரலாகும் திக் திக் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், பள்ள முடிந்து சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த 12 வயது பள்ளி மாணவி மீது அதிவேகமாக…

18 minutes ago

திமுகவுக்கு பேரதிர்ச்சி… ஸ்டாலினுக்கு செக் வைத்த செந்தில் பாலாஜி?…. தாராபுரத்தில் நடக்கும் அந்த ‘ரகசிய’ அரசியல் ஆபரேஷன்….!

தமிழக அரசியல் களத்தில் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆளும்கட்சியான தவெக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக…

26 minutes ago

“விழுவது போல நடித்து…” 73 வயது முதியவரை  திசைதிருப்பிய பெண்… ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கட்டி அபேஸ்… அதிர வைக்கும் வீடியோ வைரல்..!!

சென்னையில் பேருந்தில் பயணித்த 73 வயது முதியவரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான 714 கிராம் தங்கக் கட்டியைத் திருடிய…

26 minutes ago