BREAKING: சவரன் ரூ.1.13 லட்சத்தை தாண்டியது.. இன்று மீண்டும் உயர்ந்த தங்கம் விலை – இல்லத்தரசிகள் அதிர்ச்சி…!!

By Soundarya on சித்திரை 27, 2026

Spread the love

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று (ஏப்ரல் 27, 2026) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனையான நிலையில், இன்றைய விலை உயர்வின் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,230-க்கு விற்பனையாகிறது. அதேவேளையில், வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு நகை வாங்குவோரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.