Actor Rajinikanth

ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரி ரிலீஸ் செய்யப்படும் படையப்பா படம் – சூப்பர் ஸ்டாரின் இளைய மகள் சௌந்தர்யா வெளியிட்ட திடீர் பதிவு!

By Elango on மார்கழி 7, 2025

Spread the love

நடிகர் ரஜினிகாந்த் வருகிற 12ம் தேதி தனது 75வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஜினி பிறந்த நாளில் அவர் நடித்த படையப்பா என்ற மாஸ் ஹிட் படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கிடையே ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், நமது தலைவரின் ஒப்பற்ற மேலாதிக்கத்தின் 50 ஆண்டுகளைக் கொண்டாடுகிறோம். தூய்மையான பாணி, கௌரவம் மற்றும் காலத்தால் அழியாத நட்சத்திர அந்தஸ்து கொண்ட பயணம். உலகம் நமது தலைவரை கொண்டாடும் வேளையில் ரஜினிகாந்த்… என் அன்பான அப்பா, வரும் 12ம் தேதியன்று திரையரங்குகளுக்குத் திரும்பும் படையப்பா நிகழ்வை மீண்டும் கொண்டு வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ஒரு திருவிழாவாக மாறிய படம். இந்த கொண்டாட்டம் பெரியதாகவும், பிரகாசமாகவும், மறக்க முடியாததாகவும் இருக்கும் என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் அதில் கூறியிருக்கிறார்.