தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் வெளியான குறிப்பிடத்தக்க வெற்றி படங்களில் நடிகர் சூரி நடித்த மாமன் படமும் முக்கியமானது. இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை நடிகர் சூரியே சொந்தமாக எழுதியிருந்தார். குடும்பங்கள் கொண்டாடிய மாமன் படம் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரி மண்டாடி என்ற படத்தில் மீனவன் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தை மதிமாறன் புகழேந்தி டைரக்ட் செய்து வருகிறார்.
மண்டாடி படத்துக்கு பிறகு வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் அடுத்த தனது புதிய படத்தில் நடிகர் சூரி நடிக்க உள்ளார். அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதனால் மண்டாடி பட இயக்குனரிடம் பேசிய நடிகர் சூரி, அண்ணே வருகிற மார்ச் மாதத்துக்குள் மண்டாடி படத்தில் என் காட்சிகளை எல்லாம் எடுத்து முடிச்சுட்டு தயவு செஞ்சு என்னை இதோட விட்ருங்க என்று கோரிக்கையாக கூறியிருக்கிறார். ஏனெனில் மண்டாடி படத்தில் அடர்ந்த தாடி மீசை கெட்டப்பில் சூரி இருக்கிறார்.
