சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூரி பேசியதாவது, நடிகராக வாய்ப்பு கிடைக்காத காலத்தில் நான் சென்னையில் பெயிண்டராக வேலை பார்த்தேன். அப்போது கட்டடங்களுக்கு பெயிண்ட் அடித்தேன். ஒரு கட்டடத்தில் பெயிண்ட் அடித்துவிட்டு மதியம் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது அந்த பில்டிங் ஓனர் வருகிறார் என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களை எல்லாம் எந்திரிச்சு போங்க என விரட்டினார்கள். ஒருவர் கோபமா வந்து என் சாப்பாட்டு இலையை பிடித்து இழுத்து தள்ளிப் போட்டார். நிம்மதியா சாப்பிட விடலே.
அந்த கட்டடம் இப்போது பெரிய ஜவுளிக்கடையா இருக்குது. அங்கு குடும்பத்துடன் துணி எடுக்க சமீபத்தில் போனோம். என்னைய பார்க்க கூட்டம் அதிகமாயிடுச்சு. அப்போது என் சாப்பாட்டு இலையை இழுத்து போட்ட அந்த மேனேஜர் என்கிட்ட வந்து, சார் நீங்க எம்டி சார் ரூம்ல வந்து உட்காருங்க. கூட்டம் அதிகமாகுது. அங்க டிரஸ்சை எல்லாம் எடுத்துட்டு வந்து காட்டச் சொல்றேன்னு சொன்னார். அவருக்கு என்னை அடையாளம் தெரியலே, ஆனால் எனக்கு அவரை நல்லாத் தெரிஞ்சது. ஆனா நான் எதுவும் அவர்கிட்ட சொல்லலே என்று நடிகர் சூரி வேதனையாக கூறியிருக்கிறார்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…