Categories: சினிமா

வசூல் வேட்டையில் அசத்தும் சூரியின் ‘கருடன்’ திரைப்படம்.. இப்ப வரைக்கும் மொத்த கலெக்சன் எவ்வளவு தெரியுமா..?

Spread the love

துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படத்தின் இரண்டாவது வார வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கின்றது.

தமிழ் சினிமாவில் சூரியன் நடிப்பில் வெளிவந்த கருடன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கருடன்.  இந்த திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில் தொடர்ந்து வசூலிலும் முன்னேற்றம் இருந்தது.

பல இளம் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் சத்தமே இல்லாமல் வெளியான சூரியின் கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசதி வந்த சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் குமரேசன் என்கின்ற கதாபாத்திரத்தில் மிகவும் சாதுவாக நடித்திருந்தார். இப்படத்தின் இரண்டாவது பாகமும் தற்போது தயாராகி வருகின்றது. இந்நிலையில் கருடன் திரைப்படத்தில் ஆக்ரோசமாக நடித்து அசத்தி இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் சூரியன் நடிப்பை பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.

முதல் நாளில் 4 கோடி வசூல் செய்த இப்படம் இரண்டாவது நாளில் 6 கோடியும், மூன்றாவது நாளில் 6.5 கோடி என முதல் வாரத்தில் 18 கோடி வசூல் செய்த நிலையில் இரண்டாவது வாரம் தொடங்கிவிட்டது. கருடன் தற்போது வரை உலகம் முழுவதும் 30 கோடி வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 23 கோடி வசூல் செய்துள்ளது.

கண்டிப்பாக இந்த திரைப்படம் 40 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. விடுதலை திரைப்படத்தை தொடர்ந்து இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் சூரி வளர்ந்து வரும் நடிகர்களின் பட்டியலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Mahalakshmi

Recent Posts

ஐயோ பாவம்… புல் வெட்டப் போன இடத்தில்… கதவு திறக்கப்பட்டு புலி கடித்ததில் பெண் பலி… ஜைப்பூரில் கொடூர சம்பவம்…!

ஜைப்பூர் உயிரியல் பூங்காவில் புல் வெட்டச் சென்ற 7-8 பெண்களில் சுகுணா தேவி என்ற பெண் கூண்டிலிருந்து தப்பியோடிய புலியால்…

7 minutes ago

மனைவியின் பிறந்தநாளன்றே அரங்கேறிய சோகம்…! “தவறு நடந்திருந்தால் மன்னித்து விடு… குட்பை…” மெசேஜ் அனுப்பி சாப்ட்வேர் ஊழியர் தற்கொலை… பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் குகட்பள்ளி தேவினகர் பகுதியைச் சேர்ந்தவர் முலுகுரி ரமேஷ் (40). மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர்,…

35 minutes ago

அய்யய்யோ கடவுளே… கண் இமைக்கும் நேரத்தில்… சாலைக்கு ஓடிய குழந்தையால்… நேர்ந்த கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சாலையோரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிப்பது ஆபத்தானது. குழந்தைகள் விளையாடும் உற்சாகத்தில் கவனமின்றி திடீரென சாலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இது அவர்களின்…

42 minutes ago

“தடம்புரண்ட பைக்… பின்னாலேயே மோதிய கார்…” வேலை முடிந்து வீடு திரும்பிய தம்பதி பலி…. பெரும் சோகம்…!!

தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சிக்னல் அருகே புதன்கிழமை மாலை 5 மணி அளவில் கோர…

45 minutes ago

ஐயோ கடவுளே… கணவனை அடித்துக் கொன்றுவிட்டு… வழிப்பறி நாடகம் போட்ட மனைவி… கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?… பகீர் பின்னணி…!

சேலம் மாவட்டம் ஓமலூர் - சங்ககிரி சாலையில் காரில் பிளை ஆஸ் பிரிக்ஸ் அதிபர் பூபதி ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டுக்…

50 minutes ago