சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைப் பகுதியில் கீரை வியாபாரம் செய்து வந்த ராஜேந்திரன் (60) என்ற திருப்பூரைச் சேர்ந்த முதியவர், திடீரென மயங்கிக் கீழே விழுந்தார். அந்தச் சமயத்தில், அங்கிருந்த மனிதநேய மக்கள் கட்சியினர் அவரை மீட்டு, முதலில் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கும், பின்னர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும் தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவர்களும் போலீசாரும் விசாரித்தபோது, ராஜேந்திரன் தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி கடந்த 15 ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வருவதும், அவரது குடும்பம் திருப்பூரில் வசிப்பதும், அவருக்கு இரண்டு மகன்கள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, பல ஆண்டுகளாகத் தங்கள் தந்தையைத் தேடி வந்த ராஜேந்திரனின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சிவகங்கைக்கு விரைந்து வந்த மகன்கள், தங்கள் தந்தையைக் கண்டதில் மகிழ்ச்சி அடைந்தனர். ராஜேந்திரனுக்கு உதவியதோடு, தொடர்ந்து அவரைப் பராமரித்து வந்த மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு அவரது குடும்பத்தினர் மனதார நன்றி தெரிவித்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகன்கள் தங்கள் தந்தையை நேரில் சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடைக்காலத்தில் குளிர்ச்சிக்காகத் தயிரை விரும்பிச் சாப்பிட்டாலும், அதனைச் சரியான முறையில் உட்கொள்ளாவிட்டால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என நிபுணர்கள்…
அழுதுகொண்டிருக்கும் ஒரு சிறுமிக்கு குரங்கு ஒன்று ஆறுதல் கூறும் காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தச் சிறுமி சோகமாக அழுது…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தத் தொகுதியில் தமிழக…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஈட்டியுள்ள இமாலய வெற்றிக்கு, தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரும் தெலுங்கு தேசம்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட நாம் தமிழர் கட்சிக்கு,…