விவாகரத்து ஈசியான விஷயம் கிடையாது.. முடிஞ்ச வரைக்கும் கூட இருக்க ட்ரை பண்ணனும்.. மனம் திறந்து பேசிய நடிகை சோனியா அகர்வால்..!!

By admin on ஆடி 19, 2024

Spread the love

நடிகை சோனியா அகர்வால் செல்வராகவன் இயக்கத்தில் ரிலீசான காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதீத காதலை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. அதன் பிறகு 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

செல்வராகவனுடன் விவாகரத்து பற்றி மனம் திறந்த சோனியா அகர்வால்! | Sonia  Agarwal Opens up the Divorce Matter with Selvaraghavan - Tamil Filmibeat

   

செல்வராகவன் இயக்கும் படங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உண்டு. செல்வராகவன் இயக்கும் படங்களில் சோனியா அகர்வால் நடித்ததால் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இருவரும் கடந்த 2006-ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

   

அவதூறு பரப்பிய ஊடகங்கள் மீது நடவடிக்கை: சோனியா அகர்வால் எச்சரிக்கை | sonia  agarwal warning media - hindutamil.in

 

 

சோனியா அகர்வால் அளித்த பேட்டியில் கூறியதாவது, செல்வராகவனுடன் இணைந்து படங்களில் நடித்தேன். அவரது ஹார்டுஒர்க் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். அதன் பிறகு ஒரு சில காரணங்களால் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. விவாகரத்து என்பது ஈஸியான விஷயம் கிடையாது.  நம்ம யோசிச்சு முடிவெடுக்கணும். விரக்தியா இருக்கும்.

செல்வராகவனின் முரட்டு தனமான \"அந்த\" குணம்...மூஞ்சிலயே முழிக்க  கூடாது...சோனியா அகர்வால் - தமிழ்நாடு

நம்ம அதிலிருந்து உடனே வெளியே வரணும்னு தோணும். மேரேஜை அவ்வளவு சீக்கிரம் பிரேக் பண்ண கூடாது. நம்மளோட முழு முயற்சியையும் கொடுத்து மேரேஜ் லைப்ல இருக்க பார்க்கணும். அப்படி இல்லன்னா விவாகரத்து தான் தீர்வு. நானும் சந்தோஷமாக திருமணம் செய்து கொண்டேன். விவாகரத்து செய்யும் போது கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு. இருவரும் பிரிந்து விட்டோம். இப்போதெல்லாம் விவாகரத்து செய்திகள் அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது என மனம் திறந்து பேசியுள்ளார்.

செல்வராகவன் குடும்பத்தால்தான் என்னுடைய ஆசை நடக்காமல் போனது.. நடிகை சோனியா  அகர்வால் வேதனை | Actress Sonia Aggarwal spoke about why she did not act in  films after marrying ...