இந்திய சினிமாவிலேயே பணக்கார நடிகர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது.
பொதுவாக சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் பெரிய அளவு சம்பளம் வாங்க மாட்டார்கள் என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கின்றோம் .ஆனால் இந்தியாவில் நகைச்சுவை நடிகர்கள் பலரும் நடிகர்களை காட்டிலும் பல மடங்கு சம்பளம் அதிகமாக வாங்கி வருகிறார்கள். ஏன் தமிழ் சினிமாவிலேயே கவுண்டமணி, வடிவேலு போன்றவர்கள் ஒரு நாள் கணக்கிற்கு சம்பளம் நிலையெல்லாம் உண்டு.
உண்மையில் இந்தியாவில் நகைச்சுவை நடிகர்களில் யார் பணக்காரர் என்றால் நடிகர் பிரம்மானந்தம் தான். இவரை நாம் தெலுங்கு திரைப்படங்களில் பெரும்பாலும் பார்த்திருப்போம். ஆனால் இவர் அறிமுகமானது தமிழில் தான். விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதில் விஜய் வீட்டில் பூஜை செய்யும் ஐயராக இவர் நடித்திருப்பார்.
அதை தொடர்ந்து தமிழில் நியூ, மொழி, சரோஜா, வானம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியில் மிகப் பிரபல காமெடி நடிகராக வலம் வருகின்றார். பெரும்பாலான தெலுங்கு திரைப்படங்களில் இவரை பார்க்க முடிகின்றது. இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தான் தற்போது வைரலாகி வருகின்றது.
பிரம்மானந்தம் அவர்கள் மாதத்திற்கு இரண்டு கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றாராம். இவரின் சொத்து மதிப்பு மட்டும் 500 கோடி இருக்கும் என்று கூறப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் இவர் ஒரு கருப்பு பிரீமியம் மெர்கடைஸ் பென்ஸ், ஆடி r8 மற்றும் ஆடி q7 உள்ளிட்ட கார்களையும் வைத்திருக்கின்றார்.
இவர் கோடிக்கணக்கான மதிப்பிற்கும் விவசாய நிலத்திற்கு சொந்தக்காரர் ஆவார். மேலும் ஹைதராபாத்தில் பிரத்தியேக ஜூபிலி ஹில்ஸ் என்ற ஒரு பங்களாவை வைத்திருக்கின்றார். 35 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் இவர் பல விருதுகளையும் வென்றிருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் இவர் ஒரு சிறந்த ஓவியராகவும் இருந்து வருகின்றார்.