ராம் படத்தில் நடித்த நடிகையா இது..? இப்ப எப்படி இருக்காங்க பாருங்களே..!

By Mahalakshmi on ஜூலை 19, 2024

Spread the love

ராம் திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்த கஜாலாவை உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா? அவர் தற்போது எப்படி இருக்கிறார் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

நடிகை கஜாலா யுனிவர்சிட்டி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளிவந்த ராம் என்ற திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய வரவேற்பு பெற்றார். இந்த திரைப்படத்தில் ஹீரோவாக ஜீவா நடித்திருப்பார். ஹீரோயினியாக கஜாலா நடித்திருப்பார்.

   

   

இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. பல விருதுகளையும் வாங்கி கொடுத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ஏழுமலை திரைப்படத்தில் நடித்திருப்பார். பின்னர் ஜோர் படத்தில் சிபிராஜ்க்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ராமன் தேடிய சீதை, எம்டன் மகன், நீ வேணுண்டா செல்லம், மதராசி உள்ளிட ஏகப்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

 

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தெலுங்கு நடிகரான அல்லாரி நரேஷ் என்பவரை காதலித்து வந்தார். பின்னர் காதல் தோல்வி அடைய தற்கொலை செய்யும் அளவிற்கு சென்ற இவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார் எனவும் கூறப்பட்டது. அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு தமிழில் வெளியான துறை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதுதான் இவர் நடித்த கடைசி படமாகும். 2011 ஆம் ஆண்டு மணி மணி மோர் மணி என்ற தெலுங்கு திரைப்படத்தில் இவர் கடைசியாக நடித்திருந்தார். அதன் பிறகு தெலுங்கிலும் பெரியளவு திரைப்படங்களின் நடிக்கவில்லை. பிறகு ஹிந்தியில் சீரியல்களில் நடித்து வந்தார். தன்னுடன் சீரியலில் நடித்த நடிகர் பைசர் அலிகான் என்பவரை காதலித்தார்.

இரண்டு வருடமாக காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்பத்துடன் இவர்களுக்கு திருமணம் மும்பையில் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கமே வராத இவர் வெளிநாட்டில் படிப்பதற்காக சென்று விட்டார் என்று கூறப்பட்டது. சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய கஜாலா அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ராம் படத்தில் நடித்த நடிகையா இது என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.