இந்தியன் 2 திரைப்படத்தின் வசூல் குறைவாக இருப்பதால் போட்ட காசையாவது எடுத்து விடுவோமா என்ற கலக்கத்தில் தயாரிப்பு நிறுவனம் இருந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியே வெளியான திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படத்தை பிரமாண்ட இயக்குனர் என்று பெயரை பெற்றிருக்கும் சங்கர் இயக்கியிருந்தார். மேலும் கமலஹாசன் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தியிருந்தார். அதைத்தொடர்ந்து சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.
கடந்த மூன்று வருடங்களாக இப்படம் எடுக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு வழியாக கடந்த ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தியா முழுவதும் வெளியான இந்த திரைப்படத்தின் விமர்சனம் படுமோசமாக இருந்ததால் வசூல் ரீதியாக மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கின்றது.

இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தியா முழுவதும் வெளியான இந்த திரைப்படத்தின் தற்போதைய வசூல் வெறும் 128 கோடிதானாம். 150 கோடியை கூட இந்த படம் தொடாது என்று பலரும் கூறி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடலாமா வேண்டாமா என்ற யோசனையில் திரையரங்கு உரிமையாளர்கள் இருப்பதாகவும் தகவல்களாக இருக்கின்றது.
இதனால் போட்ட முதலியாவது இந்த படத்தில் எடுத்து விடுவோமா என்று மிகுந்த கலக்கத்தில் படக்குழுவினர் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இயக்குனர் சங்கர் எந்த படத்திற்கும் பெறாத மோசமான விமர்சனத்தை இந்த திரைப்படத்தின் பெற்றிருக்கின்றார். மேலும் இந்தியன் 2 திரைப்படத்துடன் சேர்ந்து இந்தியன் 3 திரைப்படத்தையும் எடுத்திருக்கிறார்கள்.

இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரண்டு திரைப்படத்திற்கும் சேர்த்து மொத்தம் 500 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். ஒரு படத்திற்கு 250 கோடி என்று வைத்துக் கொண்டாலும் இந்தியன் 2 திரைப்படம் தற்போது வரை வெறும் 128 கோடியை தான் வசூல் செய்திருக்கின்றது. இந்தியன் 2 திரைப்படமே மிக மோசமான விமர்சனங்களை சந்தித்து இருப்பதால் இந்தியன் 3 திரைப்படம் எப்படி இருக்குமோ என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இப்படத்தின் விமர்சனம் சங்கரை மிகுந்த அளவில் பாதித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
