#image_title
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் ஆசைப்பட்ட ஒரு படத்தை தான் தயாரிக்க இருப்பதாகவும், அதற்கு காலமும் நேரம்தான் கைகொடுக்க வேண்டும் என்று அவரது மகன் விஜய் பிரபாகரன் உருக்கமாக பேசியிருக்கின்றார். தமிழ் சினிமாவில் புரட்சி கலைஞர் இன்று அன்போடு அழைக்கப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பிற மக்களின் துன்பத்தை துடைப்பதற்காக பாடுபட்டவர்.
அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தேமுதிக என்ற கட்சியை தொடங்கி அரசியலும் தனது பலத்தை நிரூபித்தவர். கடந்து சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தினந்தோறும் அங்கு பல ஆயிரக்கணக்கான மக்கள்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் அவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை கடந்த மே ஒன்பதாம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா வாங்கிக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
விஜயகாந்துக்கு விருது வழங்கியது தொடர்பாக பல நடிகர்கள், அரசியல், தலைவர்கள் என வீடியோ வெளியிட்டு தங்களது மகிழ்ச்சிகளை பகிர்ந்து இருந்தார்கள். இந்நிலையில் விஜயகாந்த் மறைந்த சில நாட்களில் அவரை வைத்து ஊமை விழிகள் என்ற படத்தை தயாரித்த ஆபாவாணன் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி தயாரிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
நடிகர் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திலும் ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி விஜயகாந்த் camerio ரோலில் நடித்திருக்கின்றார் .இதைத்தொடர்ந்து விஜயகாந்த் அவரின் மகனான சண்முக பாண்டியன் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த வருகின்றார். படைத்தலைவன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கின்றார். இது தொடர்பான டிரைலரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இவரின் மூத்த மகனான விஜய பிரபாகரன் சமீபத்தில் ஒரு உருக்கமான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் அதில் பிரபல நடிகர் ஜெட்லியின் சீன படமான மை ஃபாதர் இஸ் தி ஹீரோ என்ற படம் விஜயகாந்துக்கு மிகவும் பிடித்த படமாம். விஜய பிரபாகரனும் விஜயகாந்தும் சேர்ந்து அப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நடிகர் விஜயகாந்த் மிகவும் ஆசைப்பட்டு இருக்கின்றார் ஆனால் அது கடைசி வரை நடக்காமலேயே போய்விட்டதாக விஜய பிரபாகரன் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…