#image_title
தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார். இவரும் நடிகர் கார்த்திக் குமாரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பாடகியாக நல்லபடியாக சென்று கொண்டிருண்ட சுசித்ராவின் வாழ்க்கையில் அடுத்தடுத்து பல சர்ச்சைகள் எழுந்தன.
2017 ஆம் ஆண்டு சுசித்ரா சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பல முன்னணி நடிகர், நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகின. இதையெல்லாம் சுசித்ராதான் வெளியிட்டார் என்று சொல்லப்பட்டது. ஆனால் சுசித்ராவோ அந்த வீடியோக்களை நான் வெளியிடவில்லை. இன்னும் சொல்லப் போனால் அதில் இருக்கும் ஒரு வீடியோவைக் கூட நான் பார்த்தது இல்லை எனக் கூறி அதிர்ச்சியை கிளப்பினார்.
4.5 லட்சம் ஃபாலோவர்களை கொண்ட தனது ட்விட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்து இதுபோன்ற சதி வேலையில் ஈடுபட்டு இருப்பதாகவும் சுசித்ரா குற்றம்சாட்டியிருந்தார். அதையடுத்து அவருக்கு மனநலம் சரியில்லை என அவரின் அப்போதைய கணவர் கார்த்திக்குமார் குற்றம் சாட்டினர். பின்னர் இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில் இப்போது அவர் அடுத்தடுத்து பல யுடியூப் சேனல்களில் பேட்டிகொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களைப் பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அதில் தற்போது அவர் அளித்துள்ள நேர்காணலில் போதை கலாச்சாரம் தமிழ் சினிமாவில் வெகு சாதாரணமாகிவிட்டது எனக் கூறியுள்ளார்.
மேலும் “தமிழ் சினிமாவில் இந்த பழக்கத்தைக் கொண்டுவந்தது பணக்கார வீட்டுப் பையன்களான சிம்பு, யுவன் ஷங்கர் ராஜா போன்றவர்கள்தான். பாடல் ரெக்கார்டிங்குக்கு போனால் அங்கு எளிதாக போதைப் பொருட்கள் கிடைக்கும். ஆனால் நான் எவ்வளவு வற்புறுத்தினாலும் அதிலெல்லாம் ஈடுபட மாட்டேன்.
வெள்ளித் தட்டில் பவுடர் வரும் என்று நான் சொல்வது மிகையில்லை. அது உண்மையிலேயே நடந்துள்ளது. விஜய் வீட்டு முன்னால் த்ரிஷா போய் டான்ஸ் ஆடியது இப்படி ஒரு பார்ட்டியில் அவர் விட்ட சவால் காரணமாகதான். திரிஷா எப்படிப்பட்ட சவாலாக இருந்தாலும் அதை செய்யும் தைரியம் உள்ளவர் என்பதை பலர் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்” எனக் கூறி தமிழ் சினிமாவில் நல்ல நிலையில் உள்ள பலரின் பெயரையும் கூறி அவர்களும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள்தான் என்று கூறியுள்ளார்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…