“டேய் நான் உன்ன பெத்த அப்பா டா”… நடுரோட்டில் துடிதுடிக்க மகன் செய்த கொடூரம்….. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி….!

Spread the love

கோவை மாவட்டம் அன்னூர் அருகே சொத்து தகராறு காரணமாக மகனே தந்தையை நடுரோட்டில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்னக்கரசம் பாளையத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் (61) என்பவருக்கும், அவரது மகன் ராஜசேகர் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு தந்தையிடமிருந்து வீட்டைத் தனது பெயருக்கு மாற்றிக்கொண்ட ராஜசேகர், அதன்பின்னர் தந்தையைச் சரியாகக் கவனிக்காமல் வீட்டை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த விஸ்வநாதன், தனது சொத்தை மீண்டும் மீட்க வருவாய் கோட்டாட்சியரிடம் முறையிட்டதுடன், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சட்டப் போராட்டத்தினால் ஆத்திரமடைந்த ராஜசேகர், தனது தந்தையுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று ஒன்னக்கரசம் பாளையத்தில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற ராஜசேகர், தனது தந்தை என்றும் பாராமல் விஸ்வநாதனை கீழே தள்ளி, அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து அவர் தலையில் போட்டு கொடூரமாகக் கொலை செய்தார். பொதுவெளியில் நடுரோட்டில் நடந்த இந்த வெறிச்செயலைத் தொடர்ந்து, ராஜசேகர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீசார் விரைந்து வந்து விஸ்வநாதனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்போது இக்கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய ராஜசேகரை பிடிக்க அன்னூர் போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பெற்ற மகனே சொத்துக்காகத் தந்தையைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்த இந்தச் சம்பவம் மனிதநேயமற்ற செயலாகக் கருதி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“தப்பு பண்ணிட்டேன்… நான் அப்படி சொல்லிருக்க கூடாது…” ஐ.ஐ.டி பாம்பே மாணவர் தற்கொலை… மகனை இழந்த தந்தையின் கண்ணீர்…. பெரும் சோகம்…!!

மும்பை ஐ.ஐ.டி-யில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சாஹில் வாகோடே என்ற மாணவர், கடந்த 18-ம் தேதி தூக்கிட்டுத்…

1 minute ago

ராங் ரூட்டில் போறீங்க…” பைக்கில் வந்து அட்ராசிட்டி… ஊழியரை கொடூரமாக தாக்கி கொன்ற கும்பல்…. பதற வைக்கும் CCTV காட்சிகள்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் மாவட்டம் கோகாமேடி சுங்கச்சாவடியில் 21 வயதான காளு லால் என்ற வாலிபர் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.…

23 minutes ago

“என்ன தான் நடக்குது…?” ஒன்றும் அறியாமல் நின்ற வாலிபர்…. திடீரென வந்து சுற்றி வளைத்து தாக்கிய கும்பல்…. நொடியில் நடந்த சம்பவம்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் வாலட்டர்கஞ்ச் போலிஸ் எல்லைக்குட்பட்ட கணேஷ்பூர் பகுதியில், இளைஞர் ஒருவர் சாலையோரமாக அமைதியாக நின்று…

34 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட பைக்…. 4 பேர் துடிதுடித்து பலியான சோகம்…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

ஹரியானா மாநிலம் நூ பகுதியில் அமைந்துள்ள தில்லி தர்பார் உணவகம் எதிரே, அதிவேகமாக வந்த வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும்…

47 minutes ago

ரோட்டைக் கடந்த ரகசிய முதலை… 8 அடி ஆழப் பள்ளத்தில் சிக்கிய திக் திக் நிமிடங்கள்…. வீடியோ வைரல்….!

மும்பையின் ஆரே மெட்ரோ காம்ப்ளக்ஸ் வளாகத்திற்குள் உள்ள மின்சாரக் குழாயில் சிக்கியிருந்த சுமார் 3 அடி 7 அங்குலம் நீளமுள்ள…

56 minutes ago

“ஜனநாயகத்திற்கே ஆபத்தா?”…. தலைமைத் தேர்தல் ஆணையர் உடனே விலக மு.க.ஸ்டாலின் கெடு…. சற்றுமுன் பரபரப்பு….!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், SIR (சிறப்பு புலனாய்வு அறிக்கை) முறையிலான…

1 மணத்தியாலம் ago