“என் மனைவி பெயரை சொல்லுங்க…” தந்தையை கொன்று மனைவி மீது பழி போட்ட மகன்… சொத்துக்காக அரங்கேறிய கொடூரம்…. பகீர் பின்னணி…!!

By Devi Ramu on புரட்டாதி 26, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த பிரபல மருந்து விற்பனைத் தொழிலதிபர் வினீத் மனோச்சா (60), கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி தனது வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார். இக்கொலை சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் வினீத்தின் மருமகள் ஷாலு, முன்னாள் ஊழியர் விஷால் கௌதம் மற்றும் அவரது கூட்டாளி ராஜ்கிஷோர் ஆகியோரை போலிஸார் கைது செய்தனர். ஆனால், இந்த வழக்கின் விசாரணையில் போலிஸாருக்குக் கிடைத்த தொலைபேசி அழைப்பு விவரங்கள் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தின.

கொலை செய்யப்பட்ட வினீத்தின் மகன் சுப்ரத் மனோச்சா, கொலையாளி விஷாலுடன் மே மாதம் முதல் செப்டம்பர் வரை சுமார் 309 முறை ரகசியமாகப் பேசியுள்ளது போலிஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும், கொலைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வாங்கிய புதிய சிம் கார்டு மூலமும் இவர்கள் பேசியுள்ளது அம்பலமானது. தனது தந்தை வினீத் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததால், குடும்பத்திற்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வேறொரு பெண்ணுக்கு எழுதி வைத்து விடுவாரோ என்ற பயத்திலும், தனக்கு இருந்த நிதி நெருக்கடியினாலும் சுப்ரத்தே இந்த கொலைக்குச் சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

   

தந்தையைக் கொலை செய்யக் கூலிப்படைக்கு ரூ. 6 லட்சம் தருவதாகப் பேரம் பேசிய சுப்ரத், ஒருவேளை மாட்டிக்கொண்டால் தனது மனைவி ஷாலுவின் பெயரைச் சொல்லுமாறு கொலையாளிகளிடம் கூறியதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் தனது மனைவியையே பலிகடா ஆக்கிவிட்டுச் சொத்துக்களை அடையத் திட்டம் தீட்டியுள்ளார். ஆதாரங்களுடன் சுப்ரத்தை நேருக்கு நேர் வைத்து விசாரித்த கான்பூர் போலிஸார், தந்தையைக் கொன்ற குற்றத்திற்காக மகனை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.