“கணவரை இழந்து தவித்த பெண்…” ஆசை வார்த்தை கூறி வாழ்க்கையில் விளையாடிய ரேஷன் கடை ஊழியர்…. குழந்தை பிறந்ததும் பேரதிர்ச்சி… அதிர்ச்சி சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 26, 2026

Spread the love

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலநெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வேந்திரன் என்பவர் இளையான்குடியை அடுத்த திருவள்ளூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்த ரேஷன் கடைக்கு அப்பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த 30 வயது பெண் பொருட்கள் வாங்க வந்துள்ளார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாகப் பொய் ஆசை வார்த்தைகளைக் கூறிய செல்வேந்திரன், ரேஷன் கடைக்குள்ளேயே வைத்து அப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்தப் பெண் கர்ப்பமாகி அவருக்குச் சமீபத்தில் ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பிறகு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடியாது எனச் செல்வேந்திரன் அநியாயமாக மறுத்து ஏமாற்றியுள்ளார்.

   

காதலன் என்ற பெயரில் சீரழித்து விட்டு ஏமாற்றிய செல்வேந்திரன் மீது பாதிக்கப்பட்ட பெண் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த மகளிர் காவல்துறையினர், ரேஷன் கடை ஊழியர் செல்வேந்திரனை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.