போலியான டாக்டராக அவதாரம்… நெஞ்சுவலி, சிறுநீரகப் பிரச்சினைக்குத் தெரியாத பொடிகளைக் கொடுத்து லீலை… சிக்கிய வாலிபர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

By Devi Ramu on புரட்டாதி 26, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் ஹைதராபாத் கோல்கொண்டா பகுதியில் ‘ஹிக்மா செஹத் கேர் சென்டர்’ என்ற பெயரில் இயங்கி வந்த மருத்துவ நிலையத்தில், கோல்கொண்டா போலிஸார் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது, அங்கீகரிக்கப்பட்ட எந்த மருத்துவப் படிப்பும் படிக்காமல், வெறும் 12-ம் வகுப்பு மட்டுமே முடித்த முகமது அத்னான் (23) என்ற இளைஞர் நோயாளிகளுக்கு டாக்டராகச் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து முகமது அத்னானைப் போலிஸார் அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில், அத்னான் தனது தாய் சபா கான் மற்றும் சகோதரர் முகமது ஃபைசான் ஆகியோருடன் இணைந்து, தங்களைப் பாரம்பரிய ஹக்கீம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பொய் கூறி இந்த மோசடியைச் செய்து வந்தது அம்பலமானது. இவர்கள் நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், சிறுநீரகப் கோளாறுகள் மற்றும் பாலியல் பிரச்சினைகளுக்குப் பெயரிடப்படாத மர்மமான பொடிகள் மற்றும் மருந்துகளைக் கொடுத்து நோயாளிகளின் உயிரோடு விளையாடியுள்ளனர்.

   

மேலும், சமூக வலைதளங்களில் ‘டாக்டர் அத்னான் அதிகாரப்பூர்வம்’ என்ற பெயரில் பக்கங்களை நடத்தி விளம்பரம் செய்து வந்துள்ளனர். யுனானி மருத்துவர் ஒருவருக்கு மாதம் 13,000 ரூபாய் கொடுத்து, அவரது பெயரையும் முத்திரையையும் பயன்படுத்தி இந்த மோசடி மருத்துவமனையை நடத்தி வந்துள்ளனர். அங்கிருந்த ஏராளமான மர்ம மருந்துப் பாட்டில்களைக் பறிமுதல் செய்த போலிஸார், தலைமறைவாக உள்ள அத்னானின் தாய் மற்றும் சகோதரரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.