ரூ.60 லட்சம் காப்பீட்டு பணத்திற்காக மாமியாரையே போட்டு தள்ளிய மருமகன்.. திடுக்கிடும் தகவல்…!

By Nanthini on ஆடி 13, 2025

Spread the love

தெலுங்கானா மாநிலத்தில் 60 லட்சம் காப்பீட்டு பணத்திற்காக மாமியாரை மருமகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சித்தி பேட்டை மாவட்டத்தில் நடந்த ஜூலை 7ஆம் தேதி சாலையில் நடந்து சென்ற ராமவ்வா(60) என்பவர் கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அந்த மூதாட்டியின் மருமகன் வெங்கடேஷ் என்பவர் வாடகைக்கு கார் எடுத்து அதனை தன்னுடைய நண்பர் கருணாகரனிடம் கொடுத்து தன் மாமியார் மீது காரை மோதி விட்டு தப்பி செல்லுமாறு கூறியுள்ளார்.

மாமியாரின் இறப்புக்குப் பிறகு வரும் 60 லட்சம் ரூபாய் காப்பீடு பணத்தை சரிபாதி ஆக பிரித்துக் கொள்ளலாம் என்று வெங்கடேஷ் திட்டமிட்டுள்ளார். அதற்காக தனது நண்பர் உதவியுடன் விபத்து ஏற்படுத்தி மாமியாரை போட்டு தள்ளியுள்ளார். தற்போது இந்த செய்தி போலீசருக்கு தெரிய வர வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். காப்பீட்டு பணத்துக்காக மாமியாரையே மருமகன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.