காதலிச்சது ஒரு குத்தமா?.. காதல் திருமணம் செய்த ஜோடியை ஏர் கலப்பையில் பூட்டி, சாட்டையால் அடித்து சித்திரவதை செய்த கொடூரம்… ஷாக்கிங் வீடியோ..!

By Nanthini on ஆடி 13, 2025

Spread the love

காதல் திருமணம் செய்த ஜோடியை ஏர் கலப்பையில் மாடுகளைப் போல் பூட்டி சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் நியமகிரி மலைப்பகுதியில் உள்ள சிகரப்பை பஞ்சாயத்துக்கு உட்பட்டது கஞ்சமஜிரா என்ற கிராமம். மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் தந்தை வழி, அத்தை மகனை திருமணம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாட்டை அந்த ஊர் பஞ்சாயத்தார் விதித்துள்ளனர். இதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கி அவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் பழக்கம் உள்ளது.

இப்படியான நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது அத்தை மகனை காதலித்து வந்த நிலையில் இருவரும் ஊர் கட்டுப்பாட்டை மீறி திருமணம் செய்து கொண்டனர். இதனை அறிந்த ஊர் பஞ்சாயத்தார் அந்த ஜோடியை பிடித்து அங்குள்ள வயல்வெளிக்கு அழைத்துச் சென்று ஏர் கலப்பையில் மாடுகளைப் போல் பூட்டி வயலில் உள வைத்தனர். அப்போது அவர்களை ஒருவர் சாட்டையால் அடித்துள்ளார். கண்ணீருடன் அந்த ஜோடி இந்த சித்தரவதை அனுபவித்த நிலையில் அது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.