திருவண்ணாமலையை சேர்ந்தவர் ராஜா (45), மனைவி சரண்யா. இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளான நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் சென்னை பல்லாவரம் அடுத்துள்ள, பொழிச்சலூரில் 1 வருடமாக வாடகை வீட்டில் தங்கி, ஓட்டலில் மாஸ்டராக பணி புரிந்து வருகிறார்.
இவரது மாமனார் அழகர்சாமி (55), தேனி மாவட்டத்தில் வசித்து வந்தார். அழகர்சாமியின் பெயரில் ஊரில் உள்ள சொத்துக்களில், ராஜா குடும்பத்திற்கு பங்கு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. முன்தினம் இரவு, அழகர்சாமி தன் மகள் வீட்டிற்கு வந்த பொழுது, அவரிடம் சொத்து தொடர்பாக தகராறு செய்துள்ளார், ராஜா. மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், வீட்டின் வெளியே இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து அழகர்சாமியின் தலையில் பலமாக தாக்கினார், ராஜா. அழகர்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த போலீசார், ராஜாவை கைது செய்து, அழகர்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
