அடேய் தம்பி என்னடா பண்ண?… அம்மாவின் தங்கச் சங்கிலியை துண்டு துண்டாக வெட்டிய மகன்… காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போன தாய்…!

By Nanthini on மார்கழி 9, 2025

Spread the love

சீனாவில் நட்பை வளர்ப்பதற்காக சிறுவன் ஒருவன் செய்த சம்பவம் இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் சிறுவன் ஒருவன் தன்னுடைய பள்ளி நண்பர்களுக்கு நட்பை வெளிப்படுத்தும் விதமாக தன்னுடைய அம்மா அணியும் தங்க சங்கிலியை துண்டு துண்டுகளாக வெட்டி கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தாய்க்கு தெரியாது. தன்னுடைய மகன் பள்ளியில் நடந்த சுவாரசிய விஷயங்களை தன் தாயிடம் கூறிக் கொண்டிருந்தபோது இந்த விஷயம் அவருக்கு தெரியவந்துள்ளது.

உண்மையை அறிந்து அதிர்ச்சி அடைந்த தாய் சிறுவனிடம் நடந்ததை விசாரிக்க தொடங்கியுள்ளார். அப்போது சிறுவன் தான் எத்தனை துண்டுகளாக தங்கச் சங்கிலியை வெட்டினார் மற்றும் யாருக்கு கொடுத்தார் என்பதற்கான விவரங்களை அவன் மறந்து விட்டதாக தனது தாயிடம் கூறியுள்ளார். இது ஒரு புதுவிதமான விஷயமாக இருந்ததால் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த சம்பவத்தை ஆச்சரியமாக பார்த்துள்ளனர். சிறுவனின் நட்பு மற்றும் பகிர்வு மனோபாவம் பாராட்டத்தக்கது என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வந்தாலும் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் தெரிகிறது.