தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்துள்ள பயனாளிகளுக்கு மட்டுமே அரசு வழங்கக்கூடிய நிதி உதவிகள் கிடைக்கிறது. ரேஷன் கடைகளில் அரசு வழங்கும் உணவுப் பொருட்களை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது அவசியமானதாகும். இதனால் புதிய ரேஷன் கார்டுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ள தகுதியுள்ள சுமார் 55 ஆயிரம் நபர்களுக்கு விரைவில் ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இந்த ரேஷன் அட்டைகளை விரைவில் அச்சிட்டு பயனாளர்களுக்கு விநியோகிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த விநியோக பணி முழுமை அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரேஷன் அட்டைக்கான செயல்முறைகள் சமீபத்தில் மேலும் எளிமையாக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக சரிபார்ப்பு பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு தகுதியான ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரேஷன் அட்டை கிடைப்பதை உறுதி செய்ய கவனம் செலுத்துவதாகவும் இதன் மூலம் அரசு வழங்கும் அத்தியாவசிய பொருட்களும் நலத்திட்டங்களும் உரியவர்களை சென்றடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து ஏராளமான ஒரு காத்திருக்கும் நிலையில் அவர்களில் தகுதியான 55 ஆயிரம் பேருக்கு ஒரு சில நாட்களிலும் மற்றவர்களுக்கு இந்த மாதம் இறுதிக்குள்ளும் ரேஷன் கார்டுகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
