“என்னை புதைக்க வேண்டாம்”…. மரணத்திற்கு முன்பே சாலமன் பாப்பையா எழுதிய பரபரப்பு உயில்… கண்ணீரில் குடும்பத்தினர்…!

By Nanthini on புரட்டாதி 11, 2026

Spread the love

புகழ்பெற்ற தமிழறிஞரும், நகைச்சுவை ததும்பும் பேச்சால் உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்த பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு தமிழகத்தை ஆழந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகத் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், திருக்குறள் உள்ளிட்ட பல தமிழ் இலக்கியங்களுக்கு எளிய முறையில் உரை எழுதி தமிழ் உரைநடைக்கு வளம் சேர்த்தவர். பட்டிமன்ற மேடைகள் மூலம் தமிழ் மொழியின் இனிமையையும், பண்பாட்டின் பெருமையையும் பாமர மக்களிடமும் கொண்டு சேர்த்த பெருமை இவரையே சாரும்.

மறைந்த சாலமன் பாப்பையாவின் உடல், மதுரை ஆரப்பாளையம் அடுத்துள்ள ஞானஒளிபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுச் செய்தியறிந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவரது இல்லத்திற்கு நேரில் வருகை தந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பட்டிமன்ற மேடைகளில் தனது தனித்துவமான தமிழாலும், நாகரிகமான நகைச்சுவையாலும் பல தலைமுறைகளைக் கடந்து மக்களை மகிழ்வித்த ஒரு மாபெரும் ஆளுமையின் பிரிவு தமிழ் உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

   

சாலமன் பாப்பையா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், வழக்கப்படி உடலை அடக்கம் செய்யாமல், தனது விருப்பப்படி தகனம் செய்யப்பட வேண்டும் என்று அவர் ஏற்கனவே உயில் எழுதி வைத்துள்ளார். தனது இறப்பிற்குப் பிறகும் தன் ஆசைப்படியே இறுதிச்சடங்குகள் நடைபெற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, நாளை மதியம் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

அவரது மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் தமிழ் சான்றோர்களும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர். “தமிழின் இனிமையையும், பட்டிமன்றத்தின் சிறப்பையும் உலகெங்கும் கொண்டு சேர்த்த மாபெரும் தமிழறிஞரை நாம் இழந்துவிட்டோம்” எனத் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்த பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் புகழ், அவர் ஆற்றிய தமிழ் தொண்டின் வழியாக என்றும் நிலைத்து நிற்கும்.